NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரேசிலில் கோர விபத்து; பேருந்து-டிரக் மோதியதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரேசிலில் கோர விபத்து; பேருந்து-டிரக் மோதியதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
    பிரேசிலில் நடந்த கோர விபத்தில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

    பிரேசிலில் கோர விபத்து; பேருந்து-டிரக் மோதியதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 22, 2024
    07:43 am

    செய்தி முன்னோட்டம்

    தென்கிழக்கு பிரேசிலின் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் பயணிகள் பேருந்தும் ட்ரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.

    டியோபைலோ ஓடோனி அருகே நடந்த இந்த விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    சாவோ பாலோவில் இருந்து 45 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து, டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து டிரக் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

    கிரானைட் கற்கள் பேருந்தின் மீது மோதியிருக்கலாம், இது சோகத்திற்கு பங்களித்திருக்கலாம் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாகத் தெரிகிறது.

    கூடுதலாக, மூன்று பயணிகளுடன் ஒரு கார் விபத்தில் சிக்கியது. ஆனால், அனைத்து பயணிகளும் அதிசயமாக உயிர் தப்பினர்.

    பிரேசில்

    பிரேசிலில் அடிக்கடி நடக்கும் விபத்துக்கள்

    அவசர சேவைகள் விரைவாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. பாதிக்கப்பட்ட அனைவரையும் தளத்தில் இருந்து அகற்றின.

    ஆளுநர் ரோமியூ ஜெமா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் விரிவான ஆதரவை உறுதியளித்தார்.

    "குடும்பங்கள் மனிதநேயத்துடன் இந்த சோகத்தை எதிர்கொள்வதை நாங்கள் உறுதிசெய்கிறோம். குறிப்பாக கிறிஸ்துமஸுக்கு மிக அருகில்" என்று ஜெமா ஒரு சமூக ஊடக பதிவில் கூறினார்.

    இந்த விபத்து பிரேசிலின் ஆபத்தான சாலைப் பாதுகாப்பு சிக்கல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    2024 இல் 10,000 க்கும் மேற்பட்ட போக்குவரத்து இறப்புகள் பதிவாகியுள்ளன.

    முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு கால்பந்து அணி உறுப்பினர்களைக் கொண்ட பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரேசில்
    உலகம்
    உலக செய்திகள்
    விபத்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரேசில்

    பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு உலகம்
    இனவெறிக்கு எதிராக பிரேசிலுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் ஸ்பெயின் கால்பந்து அணி கால்பந்து
    சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக நெய்மருக்கு ரூ.28 கோடி அபராதம் கால்பந்து
    பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன மாடு ஆந்திரா

    உலகம்

    ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை நோக்கி 22 ட்ரோன்களை ஏவியது உக்ரைன்; இரண்டு விமான நிலையங்கள் மூடல் ரஷ்யா
    வயதான பிறகு மீண்டும் இளமையை பெறும் அரியவகை கடல் உயிரினம்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு அறிவியல்
    பங்களாதேஷ் மீது பொருளாதராத் தடை; டொனால்ட் டிரம்பிடம் வலியுறுத்த உள்ள இந்திய அமெரிக்கர்கள் பங்களாதேஷ்
    ஏலியன்களை கண்டறிய புதிய கண்காணிப்பு அமைப்பு தொடக்கம்; அமெரிக்கா முடிவு அமெரிக்கா

    உலக செய்திகள்

    10 மில்லியன் டாலர் மதிப்பிலான பழங்கால தொல்பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா அமெரிக்கா
    பிரிட்டிஷ் ராணிக்கு பிறகு இந்த விருதை பெறும் 2வது வெளிநாட்டு தலைவர் மோடி; நைஜீரியா கௌரவம் நரேந்திர மோடி
    2024இல் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரணதண்டனை விதித்த நாடு; எது தெரியுமா? சவுதி அரேபியா
    உக்ரைன் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்; ஜோ பிடென் நிர்வாகம் நடவடிக்கை அமெரிக்கா

    விபத்து

    திருநெல்வேலி விபத்து: கார் மோதியதில் 20 அடி உயரம் காற்றில் தூக்கி எறியப்பட்ட பெண் இந்தியா
    மும்பை BMW விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா கைது  மும்பை
    உத்தரபிரதேசத்தில் வேகமாக வந்த பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் 18 பேர் உயிரிழப்பு உத்தரப்பிரதேசம்
    மும்பை BMW விபத்து: தன் தவறை ஒப்புக்கொண்டார் குற்றவாளி மிஹிர் ஷா  மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025