Loading...
ஆசைக்கு தாய்லாந்து போனதால் வந்த சோதனை; சுற்றுலா சென்ற இடத்தில் 3 இந்தியர்கள் கடத்தல்
தாய்லாந்து காவல்துறையினர் ஜூலை 27 அன்று மூவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்

ஆசைக்கு தாய்லாந்து போனதால் வந்த சோதனை; சுற்றுலா சென்ற இடத்தில் 3 இந்தியர்கள் கடத்தல்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 29, 2026
05:07 pm

செய்தி முன்னோட்டம்

தாய்லாந்து நாட்டின் பட்டாயா பகுதிக்கு குறைந்த கட்டண சுற்றுலா உலா செல்ல திட்டமிட்டுச் சென்ற மூன்று இந்திய இளைஞர்கள், சர்வதேச கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக பிணைக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்திய நபர்களை உள்ளடக்கிய கடத்தல் கும்பல், அந்த இளைஞர்களைக் கொடூரமாக சித்திரவதை செய்து, அவர்களின் குடும்பத்தினரிடம் பெருந்தொகை பிணைப்பணமாகக் கேட்டு மிரட்டியுள்ளது. தகவலறிந்த தாய்லாந்து காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு ஜூலை 27 அன்று சோதனையிட்டு மூவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கடத்தல்

சதித்திட்டம் மற்றும் கடத்தல் நடந்த விதம்

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் 70,000 பாத் செலுத்தி சுற்றுலா பேக்கேஜ் வாங்கியுள்ளனர்.

ஜூலை 21 அன்று சுவர்ணபூமி விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர்கள், பட்டாயாவிற்குச் சென்று பின்னர் திட்டமிட்டபடி சுகும்விட் நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் ஒன்றை அடைந்துள்ளனர்.

அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கடத்தல்காரர்கள் அவர்களை தனித்தனியாக ஒரு வாடகை வீட்டிற்கு அழைத்து சென்று அடைத்துள்ளனர்.

வீட்டில் அடைக்கப்பட்ட இளைஞர்கள் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டும், மரக்கட்டைகளால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், அவர்களது உடலில் சிவப்பு நிறச் சாயம் பூசி, கடுமையான காயங்கள் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி காணொளி அழைப்பு மூலம் இந்தியாவில் உள்ள உறவினர்களிடம் ₹70 லட்சம் பிணைப்பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

மீட்பு நடவடிக்கை

சந்தேக நபர்கள் கைது மற்றும் விசாரணை

இந்தியா மற்றும் தாய்லாந்து அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி தீவிர விசாரணை மேற்கொண்ட உள்ளூர் காவல்துறையினர், பாங்காக்கில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த ஐந்து இந்தியர்களைக் கைது செய்துள்ளனர்.

டுபாபாயில் உள்ள பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முக்கியச் சூத்திரதாரியின் உத்தரவின் பேரிலேயே இக்கடத்தலைச் செய்ததாகக் கைதானவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT