LOADING...
கேபிடல் கலகம்: இல்லினாய்ஸ் முதன்மை வாக்குப்பதிவில் இருந்து டிரம்ப் தகுதி நீக்கம்
இல்லினாய்ஸின் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி முதன்மை வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் பங்கெடுப்பதை இல்லினாய்ஸ் மாநில நீதிபதி புதன்கிழமை தடை செய்து உத்தரவிட்டார்.

கேபிடல் கலகம்: இல்லினாய்ஸ் முதன்மை வாக்குப்பதிவில் இருந்து டிரம்ப் தகுதி நீக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 29, 2024
10:53 am

செய்தி முன்னோட்டம்

ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க கேபிட்டலில் நடந்த கிளர்ச்சியில் டொனால்ட் டிரம்பின் பங்கு காரணமாக இல்லினாய்ஸின் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி முதன்மை வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் பங்கெடுப்பதை இல்லினாய்ஸ் மாநில நீதிபதி புதன்கிழமை தடை செய்து உத்தரவிட்டார். ஆனால் டிரம்ப் மேல்முறையீடு செய்வதற்காக, அவர் தனது தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இல்லினாய்ஸ் வாக்காளர்களுக்கு ஆதரவாக உத்தரவிட்டார் குக் கவுண்டி சிர்க்யுய்ட் ஜட்ஜ் ட்ரஸி போர்ட்டர். அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு ஷரத்தை மீறியதற்காக முன்னாள் ஜனாதிபதி மார்ச் 19 அன்று மாநிலத்தின் முதன்மை வாக்குச்சீட்டு மற்றும் நவம்பர் 5 பொது தேர்தல் வாக்குப்பதிவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் வாதம்.

card 2

ட்ரம்பின் அடுத்தகட்ட நடவடிக்கை 

இல்லினாய்ஸ் வழக்கின் இறுதி முடிவு மற்றும் இதேபோன்ற வழக்குகளின் இறுதி முடிவு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும். இதனால், தனது முடிவை நிறுத்தி வைப்பதாக ட்ரஸி போர்ட்டர் கூறினார். இல்லினாய்ஸ் தகுதிநீக்க முயற்சிக்கு தலைமை தாங்கிய, 'மக்களுக்கான பேச்சு சுதந்திரம்' என்ற வழக்கறிஞர் குழு, ஒரு அறிக்கையில் தீர்ப்பை, வரலாற்று வெற்றி என்று பாராட்டியது. ஆனால், டிரம்பின் பிரச்சார செய்தித் தொடர்பாளர், "இது அரசியலமைப்பிற்கு எதிரான தீர்ப்பு, நாங்கள் விரைவில் மேல்முறையீடு செய்வோம்" என தெரிவித்துள்ளார். இந்நிலையில், அரசியலமைப்பின் 14வது திருத்தத்தின் 3வது பிரிவின் கீழ் டிரம்ப் தகுதியற்றவர் என்பதை தீர்மானித்த பின்னர், கொலராடோ மற்றும் மைனே மாநிலங்கள் டிரம்ப்பை தங்கள் மாநில வாக்குச்சீட்டில் இருந்து நீக்கியுள்ளன.