Loading...
இந்திய சுற்றுப்பயணத்திற்கான 15 பேர் கொண்ட ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு
இந்தியாவுடன் இருதரப்பு தொடரில் விளையாட உள்ள ஜிம்பாப்வே மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுற்றுப்பயணத்திற்கான 15 பேர் கொண்ட ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Oct 10, 2026
03:59 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக முதன்முறையாக நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட அணியை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜோசபின் என்கோமோ தலைமையிலான இந்த அணி, இந்தியாவில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. சர்வதேச மகளிர் சாம்பியன்ஷிப் புள்ளிகளை உள்ளடக்கிய இந்தத் தொடர், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வளர்ந்து வரும் ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு மிக முக்கியப் பரீட்சையாக அமையவுள்ளது.

நம்பிக்கை

பலம் பெறும் ஜிம்பாப்வே மகளிர் அணி

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே மகளிர் அணி வரலாற்று சாதனை படைத்தது.

ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பில் பதிவான இந்த முதல் வெற்றியில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகியான நியாஷா குவான்சுரா பந்துவீச்சில் பலம் சேர்க்கிறார்.

அவருடன் மிச்செல் மாவுங்கா, பிரான்சிஸ்கா சிபரேவும் இணைந்துள்ளனர். பேட்டிங் வரிசையில் முபாச்சிக்வா, மேயர்ஸ், திரிபானோ, நித்லோவு மற்றும் இளம் வீராங்கனை பிலவ்ட் பிஸா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கேப்டன் ஜோசபின் என்கோமோ மற்றும் சிபாண்டாவின் அனுபவம் அணிக்கு கூடுதல் பலம் அளிக்கிறது.

போட்டி அட்டவணை 

ஜிம்பாப்வே மகளிர் அணி விவரம்

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், சத்தீஸ்கரின் நவா ராய்ப்பூர் ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் அக்டோபர் 16, 18, 20 தேதிகளில் நடைபெறுகிறது.

தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், குஜராத் வதோதராவின் பரோடா கிரிக்கெட் சங்க மைதானத்தில் அக்டோபர் 23, 25, 28 தேதிகளில் நடக்கிறது.

ஜிம்பாப்வே மகளிர் அணி (15 பேர்):

ஜோசபின் என்கோமோ (கேப்டன்), பிலவ்ட் பிஸா, முகேரி-திரிபானோ, கெலிஸ் நித்லோவு, மாவுங்கா, சிபரே, ஒலிண்டர் சாரே, சிகோரா, குவான்சுரா, சிபாண்டா, லோரின் ஃபிரி, துரூரு, முபாச்சிக்வா, டெண்டாய் மகுஷா, ஷார்னே மேயர்ஸ்.

ADVERTISEMENT