'இவ்ளோ வெறி ஆகாது ராசா'; சிக்கந்தர் ராசாவுக்கு இரண்டு போட்டிகளில் தடை விதித்தது ஐசிசி
செய்தி முன்னோட்டம்
அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆக்ரோஷமாக செயல்பட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசாவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டித்துள்ளது.
லெவல் 1 வழிகாட்டுதல்களை மீறியதால் சிக்கந்தர் ராசா தொடரின் 2வது மற்றும் 3வது டி20 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிக்கந்தர் ராசாவுக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இரண்டு டீமெரிட் புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
ஹராரேயில் நடந்த முதல் போட்டியில் கடைசி பந்தில் அயர்லாந்தை தோற்கடித்த ஜிம்பாப்வே அணிக்கு இது பெரும் பின்னடைவாகி உள்ளது.
அந்த ஆட்டத்தில், சிக்கந்தர் ராசா பேட்டிங் மற்றும் பந்து இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு ஜிம்பாப்வே அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
Ireland Cricket Team players also punished by ICC
அயர்லாந்து வீரர்களுக்கும் தண்டனை விதித்த ஐசிசி
ஐசிசியால் சிக்கந்தர் ராசா மட்டும் தண்டிக்கப்படவில்லை. அயர்லாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்கள் கர்டிஸ் கேம்பர் மற்றும் ஜோசுவா லிட்டில் ஆகியோரும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
கர்டிஸ் கேம்பர் மற்றும் ஜோசுவா லிட்டில் ஆகியோரும், சிக்கந்தர் ராசாவும் மோதிக்கொண்டது தான் இந்த தண்டனைக்கு பின்னணியாகும்.
கேம்பர் மற்றும் லிட்டில் ஆகிய இரு வீரர்களுக்கும் போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் தலா ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
மூவரும் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.20 ஐ மீறியது கண்டறியப்பட்டது, இது விளையாட்டின் நடத்தைக்கு முரணானது என ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.