Page Loader
அன்னையர் தினத்தில் தோனியின் தாய்க்கு நன்றி சொன்ன சிஎஸ்கே ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்!
அன்னையர் தினத்தில் தோனியின் தாய்க்கு நன்றி சொன்ன சிஎஸ்கே ரசிகர்கள்

அன்னையர் தினத்தில் தோனியின் தாய்க்கு நன்றி சொன்ன சிஎஸ்கே ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்!

எழுதியவர் Sekar Chinnappan
May 15, 2023
11:05 am

செய்தி முன்னோட்டம்

உலக அன்னையர் தினத்தன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியது. அப்போது மைதானத்தில் இருந்த சென்னை அணியின் ரசிகர்கள் குழு ஒன்று தோனியின் தாயார் தேவகிக்கு நன்றி தெரிவித்து கவனம் ஈர்த்தனர். இது தொடர்பாக ரசிகர்கள் வைத்திருந்த போஸ்டரில், "நன்றி தேவகி ஜி. நீங்கள் எங்களுக்கு எம்எஸ் தோனியை கொடுத்தீர்கள். அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ரசிகர்களின் இந்த செயல், 'தல' தோனி பல ஆண்டுகளாகப் பெற்றிருக்கும் அபரிமிதமான அபிமானத்தையும் அன்பையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post