சென்னை ஓபன் டென்னிஸ் 2026: காற்று மாசால் இறுதிப்போட்டி ஒத்திவைப்பு; புதிய தேதி என்ன?
செய்தி முன்னோட்டம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT மைதானத்தில் நடைபெற்று வந்த WTA சென்னை ஓபன் 2026 டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) நடைபெறவிருந்தது. இரட்டையர் பிரிவு ஆட்டம் முடிவடைந்ததும் திடீரென மழை பெய்தது. மைதான ஊழியர்கள் ஆடுகளத்தை உலர்த்தியபோதிலும் மீண்டும் மழை தொடர்ந்தது. இதற்கிடையே, தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் அடர்ந்த புகை மைதானத்தை சூழ்ந்தது. இதனால் ஆடுகளத்தில் பார்வைத்திறன் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
புதிய தேதி
இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் சாம்பியன்ஷிப் மோதல்
இப்போட்டியில் முதல் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான ஜேனிஸ் ஜென் (இந்தோனேசியா) மற்றும் 3-ஆம் நிலை வீராங்கனை மக்டா லினெட் (போலந்து) ஆகியோர் மோதவிருந்தனர்.
ஆட்டம் தொடங்குவதற்கான நேரம் பலமுறை மாற்றியமைக்கப்பட்டும், சூழல் சீராகாததால் போட்டி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2022 சென்னை ஓபனில் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையைத் தவறவிட்ட மக்டா லினெட், இம்முறை தனது 4-வது WTA பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளார்.
பிலிப்பைன்ஸ்
2027 முதல் மணிலா நகரத்திற்குத் தடம் மாறுகிறது சென்னை ஓபன்
இந்தியாவில் நடைபெறும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் கடைசிப் பதிப்பு இதுவேயாகும்.
பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா ஏலாவின் வருகைக்குப் பின் அங்கு பெருமளவில் டென்னிஸ் ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
இதன் காரணமாக, 2027-ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் பிலிப்பைன்ஸின் மணிலா நகரத்திற்கு மாற்றப்படுகிறது.
இத்தகைய சூழலில், சர்வதேச இறுதிப்போட்டி நாளில் ஏற்பட்ட தடங்கல்கள் இந்திய விளையாட்டு அமைப்பாளர்களுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவின் கட்டமைப்பு
சர்வதேசப் போட்டிகள் நடத்தும் இந்தியாவின் கட்டமைப்பு மீதான விமர்சனம்
இந்தியாவில் நடைபெறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் காற்று மாசு மற்றும் பராமரிப்புக் குறைபாடுகள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் நடந்த இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பறவைகளின் எச்சம் விழுந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அத்துடன் காற்று மாசு காரணமாக உலகின் 3-ஆம் நிலை வீரர் ஆண்டர்ஸ் ஆன்டன்சென் போட்டியிலிருந்து விலகினார்.
இத்தகைய சம்பவங்கள் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தத் தயாராகும் இந்தியாவின் தகுதி குறித்து சர்வதேச அளவில் கேள்விகளை எழுப்பியுள்ளன.