மகளிர் ஐபிஎல் 2023 : அனைத்து துறையிலும் பலம் வாய்ந்த அணியாக களமிறங்கும் ஆர்சிபி
திங்கட்கிழமை (பிப்ரவரி 13) முடிவடைந்த மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் பல வீரர்களை வாங்கியுள்ளது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனாவை மிக அதிகபட்ச விலைக்கு ஏலம் எடுத்ததோடு, ஆஸ்திரேலிய இரட்டையர்களான எலிஸ் பெர்ரி மற்றும் மேகன் ஷட் ஆகியோரையும் கைப்பற்றினர். ஆர்சிபி அணி : ஸ்மிருதி மந்தனா, சோஃபி டெவின், எலிஸ் பெர்ரி, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், எரின் பர்ன்ஸ், திஷா கசட், இந்திராணி ராய், ஆஷா ஷோபனா, கனிகா அஹுஜா, டேன் வான் நீகெர்க், ப்ரீத்தி போஸ், பூனம் கெம்னார், கோமல் கன்சாட், சஹானா சன்சாட் பவார், ஹீதர் நைட், ஸ்ரேயங்கா பாட்டீல்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களின் செயல்திறன்
ஆர்சிபி முடிவடைந்த ஏலத்தில் 18 வீரர்களை ரூ.11.9 கோடி ரூபாய் செலவில் வாங்கியுள்ளது. இதில் 12 இந்திய வீரர்களும், ஆறு வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி, ரூ. 1.70 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். மேலும் ஹீதர் நைட் மற்றும் சோஃபி டிவைன் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாகும். ரூ.1.50 கோடிக்கு எடுக்கப்பட்ட ரேணுகா சிங் அணியின் பந்துவீச்சை வழிநடத்த சரியான தேர்வாகும். மேலும் உலகின் தரம் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர்களில் ஒருவரான ரிச்சா கோஷ் ரூ. 1.90 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார். இறுதியாக, அதிக தொகைக்கு எடுக்கப்பட்டுள்ள இந்திய நட்சத்திரம் ஸ்மிரிதி மந்தனா அணியின் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.