மகளிர் ஐபிஎல் 2023 : வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த குஜராத் ஜெயண்ட்ஸ்!
திங்கட்கிழமை (பிப்ரவரி 13) முடிவடைந்த மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் இந்திய அணியின் பிரபல வீராங்கனைகளை எடுக்க முடியாவிட்டாலும், உலகளவில் சிறந்து விளங்கும் பல வீரர்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னரை அதிக விலை கொடுத்து எடுத்துள்ளனர். வெளிநாட்டு வீராங்கனைகளில் அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்டது கார்ட்னர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்டரான பெத் மூனி, மேற்கிந்திய தீவுகளின் ஆல் ரவுண்டர் டியாண்ட்ரா டோட்டின் மற்றும் இந்திய ஆல்ரவுண்டர் சினே ராணா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அணியின் கேப்டன் பொறுப்பு இந்தியருக்கு கொடுக்க திட்டமிட்டிருந்தார் ஸ்னே ராணாவுக்கு செல்லவே அதிக வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஆஷ்லே கார்ட்னர் அணியை வழிநடத்துவார் எனக் கூறப்படுகிறது.
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி : முழு வீரர்களின் பட்டியல்
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முடிவடைந்த ஏலத்தில் 18 வீரர்களை வாங்க ரூ.11.5 கோடி செலவளித்துள்ளது. இந்தப் பட்டியலில் 12 இந்திய வீராங்கனைகளும், ஆறு வெளிநாட்டு வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். அணி வீராங்கனைகளின் முழு பட்டியல் : ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி, சோபியா டன்க்லி, அனாபெல் சதர்லேண்ட், ஹர்லீன் தியோல், டியான்ட்ரா டாட்டின், சினே ராணா, எஸ் மேகனா, ஜார்ஜியா வேர்ஹாம், மான்சி ஜோஷி, டி ஹேமலதா, மோனிகா பட்டேல், தனுஜா கன்வார், சுஷ்மா வர்மா, ஹர்லி குமாரி கலா, அஷ்வனி குமாரி, பருணிகா சிசோடியா மற்றும் ஷப்னிம் ஷகில்.