மகளிர் ஐபிஎல் 2023 : நட்சத்திர வீராங்கனைகளுடன் களமிறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ்!
டெல்லி கேபிடல்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில் பல நட்சத்திர வீராங்கனைகள் நிறைந்த ஒரு அணியை உருவாக்கியுள்ளது. உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங்கை டெல்லி கேபிடல்ஸ் ரூ.1.00 கோடிக்கு வாங்கியுள்ளது. சமீபத்தில் ஐசிசி டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அசத்தலான வெற்றிக்கு வழிவகுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸையும் ரூ.2.20 கோடிக்கு வாங்கியுள்ளனர். அணி : ஜெமிமா ரோட்ரிக்ஸ், மெக் லானிங், ஷஃபாலி வர்மா, ராதா யாதவ், ஷிகா பாண்டே, மரிசானே கப், டைட்டாஸ் சாது, ஆலிஸ் கேப்சி, தாரா நோரிஸ், லாரா ஹாரிஸ், ஜாசியா அக்தர், மினு மன்னி, தனியா பாட்டியா, பூனம் யாதவ், ஜெஸ், எஸ். அருந்ததி ரெட்டி, மற்றும் அபர்ணா மோண்டல்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய வீராங்கனைகள்
திங்களன்று (பிப்ரவரி 13) முடிவடைந்த ஏலத்தில் 11.65 கோடி ரூபாய் செலவிட்ட டெல்லி அணி 18 வீராங்கனைகளை வாங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் 12 இந்திய வீராங்கனைகளும், ஆறு வெளிநாட்டு வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் மூத்த ஆல்ரவுண்டர் மரிசானே கப்பை ரூ.1.5 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்தியர்களில் ரூ. 2 கோடிக்கும் ஷிகா பாண்டே ரூ. 60 லட்சத்திற்கும் வாங்கப்பட்டுள்ளார். அணியின் கேப்டன்சியை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுக்காக அதிக டி20 உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த மெக் லானிங் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் சமீபத்தில் மகளிர் யு-19 டி20 உலககோப்பையயில் இந்தியாவுக்கு பட்டம் வென்று கொடுத்த ஷபாலி வர்மா பெயரும் அடிபடுகிறது.