
ஒருநாள் உலகக்கோப்பையில் அடுத்தடுத்து வெற்றி; இந்திய அணிக்கு பரிசாக 2 நாட்கள் ஓய்வு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஐந்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மேலும், இந்த போட்டியில் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத ஒரே அணி இந்தியா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) கடைசியாக நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், 2003 ஆம் ஆண்டு முதல் ஐசிசி நிகழ்வுகளில் இந்தியாவிடம் தோல்வியே கண்டிராத நியூசிலாந்தை முதல்முறையாக வீழ்த்தியது.
two days rest for Team India in ODI World Cup 2023
இரண்டு நாட்கள் ஓய்வு
நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வரும் இந்திய அணிக்கு பரிசாக வீரர்களுக்கு இரண்டு நாள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அடுத்த போட்டி அக்டோபர் 29ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக லக்னோவில் நடக்க உள்ள நிலையில், நீண்ட இடைவெளி இருப்பதால், இரண்டு நாட்கள் தரம்சாலாவில் தங்கி ஓய்வெடுக்க உள்ளார்கள்.
தொடரில் அணியின் மீதமுள்ள அட்டவணையைப் பொறுத்தவரை, இங்கிலாந்து மோதலுக்குப் பிறகு, நவம்பர் 2ஆம் தேதி இலங்கையையும், நவம்பர் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்காவையும், நவம்பர் 12ஆம் தேதி நெதர்லாந்தையும் இந்தியா எதிர்கொள்ள உள்ளது.
ஹர்திக் பாண்டியா குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் இல்லை என்றாலும், லக்னோவில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.