Page Loader
இந்தியாவுக்கு எதிராக மிகவும் அரிதான சாதனையை நிகழ்த்திய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள்
இந்தியாவுக்கு எதிராக மிகவும் அரிதான சாதனையை நிகழ்த்திய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள்

இந்தியாவுக்கு எதிராக மிகவும் அரிதான சாதனையை நிகழ்த்திய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 19, 2023
07:15 pm

செய்தி முன்னோட்டம்

1998ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இன்று (அக்டோபர் 19) முதல் முறையாக இந்தியாவில் நேருக்கு நேர் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் வங்கதேச கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ் மற்றும் டான்சித் ஹசன் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். மேலும், அவுட்டாவதற்கு முன் இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு அருமையான தொடக்கத்தையும் கொடுத்தனர். இதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அரைசதம் அடித்த நான்காவது தொடக்க ஆட்டக்காரர் ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளனர்.

Bangladesh players creates rare record against india

இந்தியாவுக்கு எதிராக அரைசதம் அடித்த தொடக்க ஜோடிகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக கடைசியாக, 2019 உலகக் கோப்பையில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் அடித்த கடைசி ஜோடி தொடக்க ஆட்டக்காரர்கள் ஆவர். அதற்கு முன்னதாக, 1996இல் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் மற்றும் மார்க் டைலர் ஜோடியும், 1992இல் ஆண்ட்ரூ ஹட்சன் மற்றும் பி கிர்ஸ்டன் ஜோடியும் அரைசதம் அடித்துள்ளனர். இந்த சாதனையுடன் மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், எதிரணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைசதங்களை அடித்த முந்தைய மூன்று முறையும் இந்திய அணி தோல்வியையே தழுவிய சோக வரலாறைக் கொண்டுள்ளது. எனினும், அந்த சோக வரலாறை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.