இந்திய டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆயத்த முகாமுக்கு 18 பேர் கொண்ட அணியை அறிவித்தது.
ஆயத்த அணியில் இடம் பெற்றுள்ள ஜேசன் ஹோல்டர் மற்றும் கைல் மேயர்ஸ் உட்பட அவர்களது பெரும்பாலான ஒயிட்-பால் வீரர்கள் தற்போது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தகுதிச் சுற்றில் விளையாடி வரும் நிலையில், கிரேக் பரத்வைட் தலைமையிலான மீதமுள்ள டெஸ்ட் அணி வெள்ளிக்கிழமை (ஜூன் 30) முதல் அணியுடன் ஆயத்த முகாமில் ஈடுபடவுள்ளது.
ஆயத்த முகாமை முடித்துக் கொண்டு ஜூலை 9ஆம் தேதி டொமினிகாவிற்கு இந்த அணி பயணம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
west indies test squad
வெஸ்ட் இண்டீஸ் ஆயத்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்
சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் தொடங்கி டெஸ்ட் அணி முன்னேறி வர முடியும் என்று நம்புகிறார்கள்.
ஆயத்த முகாமுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி : கிரேக் பரத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜெர்மைன் பிளாக்வுட், ன்க்ருமா பொன்னர், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், கவேம் ஹாட்ஜ், அகீம் ஜோர்டான், மார்க் அகிலி, ஜெர்டன், மார்க் ஆக்வி ஆண்டர்சன் பிலிப், ரேமன் ரீஃபர், கெமர் ரோச், ஜேடன் சீல்ஸ், ஜோமெல் வாரிக்கன்.