
சுந்தர் வந்தார் சுந்தர் வென்றார்; கூகுள் சிஇஓவை குறிப்பிட்டு குஜராத் டைட்டன்ஸ் பதிவு; பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
தனது முன்னாள் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஒரு சிறப்பான ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) அன்று ஐபிஎல் 2025இல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.
இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தில் பங்கேற்ற சுந்தர் 29 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து, குஜராத் டைட்டன்ஸ் 153 ரன்களை வெற்றிகரமாக துரத்தி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்ய உதவினார்.
அவரது ஆட்டத்தைத் தொடர்ந்து, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின் மார்ச் 26 ட்வீட்டை குறிப்பிட்டு குஜராத் டைட்டன்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
பின்னணி
சுந்தர் பிச்சை சொன்னது என்ன?
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சேர்க்கப்பட்ட போதிலும், முழுமையாக பயப்படுத்தப்படாதது குறித்து மார்ச் 27 அன்று வெளியிட்ட ஒரு பதிவில் ஆச்சரியம் தெரிவித்திருந்தார்.
இந்திய தேசிய அணிக்காக வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்ட போதிலும், அவர் குறைவாகப் பயன்படுத்தப்பட்டதாக ஒரு ரசிகரின் கவலைக்கு பதிலளிக்கும் வகையில் சுந்தர் பிச்சை தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது பதிவை குறிப்பிட்டு, "சுந்தர் வந்தார் சுந்தர் வென்றார்" என குஜராத் டைட்டன்ஸ் அணி பதிவிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
குஜராத் டைட்டன்ஸ் எக்ஸ் தள பதிவு
Sundar came. Sundar conquered. https://t.co/CjOOtEhBBV
— Gujarat Titans (@gujarat_titans) April 6, 2025
ஐபிஎல்
ஐபிஎல்லில் வாஷிங்டன் சுந்தரின் செயல்பாடு
வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல்லில் இதுவரை நிலையான வாய்ப்புகளை பெற முடியாமலே இருந்து வந்துள்ளார்.
முன்னதாக, 2022 முதல் 2024 வரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் அவர் விளையாடிய மூன்று வருட காலத்தில், அவர் குறைந்த வாய்ப்புகளையே பெற்றார்.
இதற்கு நேர்மாறாக, வாஷிங்டன் சுந்தரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை நிலையான உயர்வைக் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான இந்தியாவின் டி20 தொடரில் அவர் சேர்க்கப்பட்டதிலிருந்து, அவர் பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி அணி போன்ற உயர்மட்ட தொடர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.