
India vs Afghanistan 2nd T20I: 429 நாட்களுக்கு பிறகு டி20 போட்டியில் விராட் கோலி
செய்தி முன்னோட்டம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியின் மூலமாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 429 நாட்களுக்கு பிறகு டி20 போட்டியில் விளையாடுகிறார்.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி.
முன்னதாக டி20 கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்த தொடரின் மூலமாக மீண்டும் டி20 கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர்.
முதல் டி20 போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடிய நிலையில், தனிப்பட்ட காரணத்திற்காக விராட் கோலி விளையாடவில்லை.
இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் விராட் கோலி களமிறங்குகிறார்.
கிட்டத்தட்ட 429 நாட்களுக்கு பிறகு விராட் பங்குபெறும் டி20 போட்டி இதுவே.
card 2
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் விராட்
முதல் டி20 போட்டியைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு இந்தூரில் 2ஆவது டி20 போட்டி நடக்கிறது.
இதற்காக விராட் கோலி இந்தூர் வந்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் இடம் பெற்று விளையாடினார்.
இதுவரையில் விராட் கோலி, 115 டி20 போட்டிகளில் விளையாடி, 4008 ரன்களும், ஒரு சதமும், 37 அரைசதமும் அடித்துள்ளார்.
இதில், அதிகபட்சமாக 122 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.