அடுத்த செய்திக் கட்டுரை

இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த எம்.எஸ்.தோனி : வைரலாகும் சிஎஸ்கே வீடியோ
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 16, 2023
04:50 pm
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கிட்டார் வாசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் ப்ரோமோ வீடியோக்கான ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் சிஎஸ்கே கேப்டன் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர், ஷிவம் துபே ஆகியோர் இடம் பெற்ற ஷூட்டிங்கின் வீடியோ கிளிப் ஒன்றை அந்த அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் கிட்டார் ஒன்றை வைத்துக் கொண்டு ஜாலியாக இசைத்தபடி உள்ளார்.
இதற்கிடையே, தோனிக்கு இது கடைசி ஐபிஎல் சீசன் எனக் கூறப்படுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே நடப்பு ஐபிஎல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ
Groovy Wednesday! 🥳#WhistlePodu #Yellove 🦁💛 @snj10000 pic.twitter.com/fLpSthiMrw
— Chennai Super Kings (@ChennaiIPL) March 15, 2023
செய்தி இத்துடன் முடிவடைந்தது