ஒலிம்பிக் தகுதி நீக்கத்தினை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வியாழன் அன்று தனது ஓய்வை அறிவித்தார். 50 கிலோ மகளிர் மல்யுத்தப் போட்டியில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் வினேஷ் தங்கப் பதக்கப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தனது ஓய்வை பற்ற, இந்தியில் X இல் பதிவிட்ட வினேஷ், " மா குஸ்தி (மல்யுத்தம்) எனக்கு எதிராக வென்றது. நான் தோற்று விட்டேன், என்னை மன்னியுங்கள். உங்கள் கனவு மற்றும் எனது தைரியம் உடைந்து விட்டது. எனக்கு இப்போது எந்த வலிமையும் இல்லை." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
வினேஷின் பதிவு
வினேஷின் பதிவு
"குட்பை மல்யுத்தம் 2001-2024," என்றும் அவர் பதிவு
அந்த பதிவில் இறுதியாக,"குட்பை மல்யுத்தம் 2001-2024" என அவர் தெரிவித்துள்ளார். வினேஷ், 5-0 என்ற வித்தியாசத்தில் அரையிறுதிப் போட்டியில் வென்றார் மற்றும் OIympics இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை ஆவார். இருப்பினும், அவர் 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததற்காக இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் அபிட்ரேஷன் கோர்ட்டில்(CAS) மேல்முறையீடு செய்தார். இந்நிகழ்ச்சியில் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கின் தீர்ப்பிற்காக வினேஷ் உட்பட நாடே காத்திருக்கிறது. ஹரியானாவைச் சேர்ந்த 29 வயதான வினேஷ் போகட், மூன்று விளையாட்டுகளிலும் மூன்று வெவ்வேறு எடைப் பிரிவுகளில் போட்டியிட்ட, மூன்று முறை ஒலிம்பியன் ஆவார்.