INDvsBAN முதல் டி20: ரீ என்ட்ரியில் சஞ்சு சாம்சன், ஷிவம் தூபேவின் சாதனையை முறியடித்தார் வருண் சக்கரவர்த்தி
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விளையாடும் லெவனில் வருண் சக்ரவர்த்தி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். மர்ம சுழற்பந்து வீச்சாளராகக் கூறப்படும் வருண் சக்ரவர்த்தி, குவாலியரில் உள்ள நியூ மாதவ்ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடரின் தொடக்க ஆட்டத்தில் தனது ஏழாவது சர்வதேச டி20 போட்டியில் விளையாடினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இரண்டு சர்வதேச போட்டிகளுக்கு இடையே அதிக இடைவெளி எடுத்துக் கொண்ட வீரர்களில் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே போன்ற வீரர்களை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இரண்டு டி20 போட்டிகளுக்கு இடையே அதிக இடைவெளி
கடைசியாக 2021இல் டி20 உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி, தனது அடுத்த டி20யில் விளையாடுவதற்கு இடையே இந்தியாவின் 86 டி20 போட்டிகளை தவறவிட்டுள்ளார். அதே நேரம் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் முறையே 73 மற்றும் 70 டி20 போட்டிகளில் இடம்பெறாமல் இருந்துள்ளனர். இந்த பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது முதலிடம் வகிக்கிறார். அவர் இரண்டு போட்டிகளுக்கு இடையில் 104 ஆட்டங்களைத் தவறவிட்டுள்ளார். இதற்கிடையே, வங்கதேசத்திற்கு எதிரான இந்த போட்டியில், வருண் சக்ரவர்த்தி தனது நான்கு ஓவர்களில் 31 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார்.