Loading...
15 வயதில் உலக சாதனை! சச்சின் சாதனையைத் தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி! ஜிம்பாப்வேக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதம்
15 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி

15 வயதில் உலக சாதனை! சச்சின் சாதனையைத் தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி! ஜிம்பாப்வேக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 23, 2026
08:37 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் பேட்டிங் புயல் வைபவ் சூரியவன்ஷி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்து உலக வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஜிம்பாப்வே நாட்டின் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், வெறும் 18 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசி இந்த மகத்தான சாதனையைப் படைத்தார். இதன் மூலம் சர்வதேசக் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கரின் 37 ஆண்டு கால சாதனை தகர்ப்பு

இந்த அரைசதத்தின் மூலம், இந்தியக் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் பல ஆண்டுகால இந்திய சாதனையை வைபவ் சூரியவன்ஷி முறியடித்துள்ளார்.

சச்சின் தனது 16 வயது 213 நாட்களில் பாகிஸ்தானுக்கு எதிரான பாகிஸ்தான் ஃபேசலாபாத் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சர்வதேச அரைசதத்தைப் பதிவு செய்திருந்தார்.

தற்பொழுது வைபவ் சூரியவன்ஷி தனது 15 வயது 118 நாட்களில் இந்த சாதனையை எட்டி, இந்தியளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளார்.

சாதனையாளர்கள்

சர்வதேச மற்றும் டி20 போட்டிகளில் இளம் வயது சாதனையாளர்கள்

முன்னதாக நேபாளத்தை சேர்ந்த குஷால் மல்லா தனது 15 வயது 340 நாட்களில் சர்வதேச அரைசதம் அடித்ததே உலக சாதனையாக இருந்தது.

அதைத் தற்பொழுது வைபவ் முறியடித்துள்ளார்.

அதேபோல, டி20 கிரிக்கெட்டில் ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் புரூஸ் (16 வயது 56 நாட்கள்) வைத்திருந்த அதிவேக டி20 சாதனையும் தற்பொழுது தகர்க்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முழு உறுப்பினர் நாடுகளின் பட்டியலிலும், ஒட்டுமொத்த சர்வதேச அளவிலும் வைபவ் சூரியவன்ஷி முதலிடத்தைப் பிடித்து சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார்.

ADVERTISEMENT

அரைசதம்

18 பந்துகளில் விளாசிய அதிரடி அரைசதம்

ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த 126 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய இந்திய அணியின் சேஸிங்கில், தொடக்கம் முதலே வைபவ் சூரியவன்ஷி மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டார்.

எதிர்நீச்சல் போட்ட பந்துகளைப் பயமின்றி எதிர்கொண்ட அவர், 18-வது பந்தில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.

அவரது இந்த அதிரடி ஆட்டம் இந்திய அணி மிக எளிதாகவும் விரைவாகவும் வெற்றியை எட்ட வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அவரது திறமையைப் பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT