ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் கேப் வைத்துள்ளவர்கள் தற்போதைய நிலவரம்
ஐபிஎல் 2023 இன் 18வது போட்டியில் மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 154 என்ற இலக்கை துரத்திய நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், இன்னிங்ஸின் கடைசி பந்தில், சாம் கர்ரன் வீசிய பந்தை ராகுல் தீவட்டியா பவுண்டரிக்கு அடித்து வெற்றியை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் அதே 6வது இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் வைத்துள்ளவர்களின் விபரம்
பிளேஆப் சுற்றுக்கு முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் தகுதி பெறும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இரண்டாவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் மூன்றாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நான்காவது இடத்திலும் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் ஆறாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஏழாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் எட்டாவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒன்பதாவது இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் கடைசி இடத்திலும் உள்ளது. அதிக ரன்கள் எடுப்பவர்களுக்கு கொடுக்கப்படும் ஆரஞ்சு கேப்பை 233 ரன்களுடன் ஷிகர் தவான் வைத்துள்ளார். மேலும் அதிக விக்கெட் எடுப்பவர்களுக்கு கொடுக்கப்படும் பர்ப்பிள் கேப்பை 10 விக்கெட்டுகளுடன் யுஸ்வேந்திர சாஹல் தக்கவைத்துள்ளார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்