சர்வதேச தடகள போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்
வியாழன் (ஜூன் 1) அன்று கிரீஸின் கலமாட்டாவில் உள்ள எத்னிகான் ஸ்டேடியத்தில் நடந்த பாப்பாஃப்லெசியா சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் கார்த்திக் உன்னிகிருஷ்ணன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றார். கார்த்திக் உன்னிகிருஷ்ணன் 0.1 மீ உயரத்தில் தங்கத்தை வெல்வதற்கான வாய்ப்பை தவறவிட்டார். அவர் 16.05 மீட்டர் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். மறுபுறம் பிரான்சில் உள்ள ஸ்டேட் டெஸ் கிராண்ட்ஸ் பெச்சர்ஸில் 2023 ஆம் ஆண்டு மாண்ட்ரூயில் சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் அப்துல்லா அபூபக்கர் ஆடவருக்கான மும்முறை தாண்டுதலில் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். அப்துல்லா அபூபக்கர் தனது 16.80 மீ தாண்டி தனது கேரியரில் அதிகபட்ச தூரத்தை பதிவு செய்தார்.