Page Loader
ஒருநாள் உலகக்கோப்பை : டிராவிஸ் ஹெட் காயத்தால் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பும் மார்னஸ் லாபுஷாக்னே
டிராவிஸ் ஹெட் காயத்தால் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பும் மார்னஸ் லாபுஷாக்னே

ஒருநாள் உலகக்கோப்பை : டிராவிஸ் ஹெட் காயத்தால் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பும் மார்னஸ் லாபுஷாக்னே

எழுதியவர் Sekar Chinnappan
Sep 18, 2023
05:04 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டிராவிஸ் ஹெட்டின் இடது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் பாதியில் அவர் இடம் பெறமாட்டார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், தொடரின் இரண்டாவது பாதியிலும் அவர் இடம் பெறுவது நிச்சயமற்ற நிலையில் உள்ளது. முன்னதாக, கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி வீசிய பந்து டிராவிஸ் ஹெட்டின் இடது கையுறையை தாக்கியது. இதையடுத்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், மருத்துவ சோதனையில் அறுவை சிகிச்சை தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Travis head injury troubles Australia

டிராவிஸ் ஹெட் குறித்து தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கருத்து

டிராவிஸ் ஹெட் காயம் பயப்படும் அளவிற்கு இல்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். எனினும், அவர் உலகக்கோப்பையின் முதல் பாதியில் இடம்பெற வாய்ப்பில்லை எனக் கூறிய அவர், கடைசி கட்டத்தில் அவரை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பதும் சந்தேகம் தான் எனக் கூறினார். அதே சமயம் உலகக்கோப்பையில் பங்கேற்கும் 15 பேரை தேர்வு செய்யும் முடிவு தன்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ள பயிற்சியாளர், தேர்வர்கள் இதுகுறித்து சிந்தித்து எச்சரிக்கையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், தற்போது டிராவிஸ் ஹெட்டுக்கு பதிலாக முழு ஃபார்மில் உள்ள மார்னஸ் லாபுஷாக்னேவை அணியில் சேர்ப்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.