31வது பிறந்தநாளை கொண்டாடும் கே.எல்.ராகுலின் வியக்க வைக்கும் சாதனைகள்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனுமான கே.எல் ராகுல் தனது 31வது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) கொண்டாடுகிறார்.
கே.எல்.ராகுலின் பிறந்த நாளான இன்று அவர் செய்த சில சாதனைகளை இதில் பார்க்கலாம்.
ஐபிஎல்லில் அதிவேகமாக 4,000 ரன்களைக் கடந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை கேஎல் ராகுல் கொண்டுள்ளார்.
அறிமுக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் கேஎல் ராகுல். 2016 ஜூன் மாதம் ஜிம்பாப்வேக்கு எதிராக ராகுல் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்த சாதனையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். இந்தச் சாதனையை நிகழ்த்திய ஒரே இந்திய வீரர் இவர்தான்.
ட்விட்டர் அஞ்சல்
கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ பிறந்தநாள் வாழ்த்து
1️⃣7️⃣3️⃣ intl. Matches 👌
— BCCI (@BCCI) April 18, 2023
6️⃣8️⃣9️⃣3️⃣ intl. Runs 🙌🏻
1️⃣4️⃣ intl. Hundreds 💯
Here’s wishing @klrahul a very happy birthday 🎂👏#TeamIndia pic.twitter.com/69j7Z3rqxn