Page Loader
ஐபிஎல்லின் சிறந்த டாப் 3 பார்ட்னர்ஷிப் ஸ்கோர்கள்
ஐபிஎல்லின் சிறந்த டாப் 3 பார்ட்னர்ஷிப் ஸ்கோர்கள்

ஐபிஎல்லின் சிறந்த டாப் 3 பார்ட்னர்ஷிப் ஸ்கோர்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 05, 2023
11:00 am

செய்தி முன்னோட்டம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதுவரை ஒரு இன்னிங்சில் பார்ட்னர்ஷிப் மூலம் அதிக ரன்கள் குவித்த டாப் 3யில் ஆர்சிபியின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு :- 3) குயிண்டன் டி காக் - கே.எல்.ராகுல் : 2022 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதியது. தொடக்க ஜோடியாக களமிறங்கிய குயிண்டன் டி காக் மற்றும் கே.எல் ராகுல் ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 210 ரன்கள் குவித்தனர். இதில் டி காக் 123 ரன்களும், கே.எல்.ராகுல் 87 ரன்களும் எடுத்தனர்.

ஐபிஎல்லின் சிறந்த டாப் 3 பார்ட்னர்ஷிப்

முதல் இரண்டு இடங்களிலும் ஆர்சிபியின் ஆதிக்கம்

2) விராட் கோலி - ஏபி டி வில்லியர்ஸ் : 2015இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி ஜோடி மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாம் விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 215 ரன்கள் குவித்தனர். இதில் டி வில்லியர்ஸ் 133 ரன்களும், கோலி 82 ரன்களும் எடுத்தனர். 1) விராட் கோலி - ஏபி டி வில்லியர்ஸ் : 2016இல் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக இதே ஜோடி மீண்டும் இரண்டாவது விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்தனர். இதில் இருவரும் சதமடித்தனர். தற்போது வரை இந்த ஸ்கோர் தான் முதலிடத்தில் இருக்கும் நிலையில், 2023 ஐபிஎல்லில் இது முறியடிக்கப்படுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் ஐபிஎல்லை எதிர்நோக்கியுள்ளனர்.