அடுத்த செய்திக் கட்டுரை

சென்னையில் தொடங்கியது ஐபிஎல் கொண்டாட்டம்: நீண்ட வரிசையில் டிக்கெட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 27, 2023
01:52 pm
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 3 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (மார்ச் 27) காலை 9.30 மணிக்கு பேடிஎம் தளத்திலும், சேப்பாக்கம் மைதான கவுன்ட்டரிலும் தொடங்கியது.
டிக்கெட் விலை ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதற்காக கவுன்ட்டரில் நேற்று மாலை 5 மணி முதலே ரசிகர்கள் நீண்ட நேரம் கியூவில் நின்று வாங்கிச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
ஐபிஎல் டிக்கெட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
Anbaala...Thaana Serndha Kootam! #AnbuDen 💛 pic.twitter.com/XBQIMKzs9O
— Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2023