'அரையிறுதிக்கு தகுதி பெற தெய்வம் அருள் புரியணும்'; பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் பேட்டி
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அரையிறுதிக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.
இதில், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தற்போது முதல் மூன்று இடங்களில் இருப்பதோடு அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
மேலும், புதன்கிழமை (நவம்பர் 8) இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து தோல்வி அடைந்த நிலையில், தற்போது அரையிறுதிக்கான போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள், மட்டுமே உள்ளன.
இந்த மூன்று அணிகளுமே தலா எட்டு புள்ளிகளுடன் உள்ள நிலையில், மூன்று அணிகளுக்கும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது.
மேலும், வியாழக்கிழமை நியூசிலாந்து இலங்கையுடனும், வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்காவுடனும், சனிக்கிழமை பாகிஸ்தான் இங்கிலாந்துடனும் மோத உள்ளன.
Pakistan need blessings from god for semifinal berth
பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் பேட்டி
மற்ற இரண்டு அணிகளும் தங்கள் போட்டியில் தோல்வி அடைந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றால், அந்த அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.
மாறாக, நியூசிலாந்து அல்லது ஆப்கானிஸ்தான் அல்லது இரண்டு அணிகளுமே தங்கள் போட்டிகளில் வெற்றி பெற்றால், அப்போது நிகர ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பு இருக்கும்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர், தாங்கள் அரையிறுதியில் நுழைவதற்கான வாய்ப்பை பெற தாங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்பதோடு, சிறிது தெய்வத்தின் துணையும் வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தகுதி பெற்றால், நவம்பர் 16 ஆம் தேதி கொல்கத்தாவில் இந்தியாவுடன் அரையிறுதியில் மோதும் வாய்ப்பைப் பெறும்.