Loading...
உலக ஜூனியர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்: பட்டம் வென்ற தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் வென்ற சவிதா ஸ்ரீக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக ஜூனியர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்: பட்டம் வென்ற தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

எழுதியவர் Vasuki
Nov 28, 2026
05:23 pm

செய்தி முன்னோட்டம்

வெனிசுலா நாட்டில் நடைபெற்று வரும் பிடே உலக ஜூனியர் (U-20) மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ மற்றும் மூன்றாம் இடம் பிடித்த தமிழக வீராங்கனை நிவேதிதா ஆகியோருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தித் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள இருவரையும் பாராட்டி அவர் சமூக வலைதளத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் பாராட்டு

இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்குப் பெரிய ஊக்கம்

அந்த வாழ்த்துச் செய்தியில், சவிதா ஸ்ரீ மற்றும் நிவேதிதா ஆகியோர் தங்களது அபாரமான அறிவாற்றல், நுணுக்கமான ஆட்டத்திறன், விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றால் உலக அரங்கில் இந்தச் சாதனையைப் படைத்துள்ளதாக முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களது இந்த வரலாற்று வெற்றி இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது என்றும், வருங்காலங்களிலும் சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் தொடர்ந்து பெருமை தேடித்தர வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT