LOADING...
டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வேட்டையாடிய டாப் 5 வீரர்கள் யார்?
இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது துல்லியமான பந்துவீச்சால் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வேட்டையாடிய டாப் 5 வீரர்கள் யார்?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 28, 2026
06:30 pm

செய்தி முன்னோட்டம்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி பலமுறை ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த வடிவத்தில், இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது துல்லியமான பந்துவீச்சால் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அந்த வகையில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் 5 இந்திய வீரர்கள் இதோ:

#1

அஸ்வின் ரவிச்சந்திரன் 

இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், டி20 உலகக் கோப்பையில் இந்தியா சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இவர் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனையை அவர் 24 போட்டிகளில் நிகழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது அனுபவம் மற்றும் பந்துவீச்சில் உள்ள மாறுபாடுகள் பலமுறை இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்துள்ளன.

#2

அர்ஷ்தீப் சிங்

இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் குறுகிய காலத்திலேயே இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி ஆச்சரியப்படுத்தியுள்ளார். 2024 உலகக் கோப்பையில் மட்டும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். ஒட்டுமொத்தமாக இவர் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Advertisement

#3

ஜஸ்பிரித் பும்ரா

உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் பும்ரா, டி20 உலக கோப்பையில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக 2024 தொடரில் இவரது எக்கனாமி ரேட் (4.17) உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இவர் கில்லாடி.

Advertisement

#4

ஹர்திக் பாண்டியா

அணிக்கு தேவையான ஆல்-ரவுண்டராக திகழும் ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். இவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மத்திய ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பதில் இவர் வல்லவர்.

#5

ரவீந்திர ஜடேஜா

அஸ்வினைத் தொடர்ந்து மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா 22 விக்கெட்டுகளுடன் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். சிக்கனமான பந்துவீச்சு மற்றும் அபாரமான பீல்டிங் மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பதில் ஜடேஜா முக்கியப் பங்கு வகிக்கிறார்.

Advertisement