LOADING...
உலகக்கோப்பை நடுவர் பட்டியலில் தமிழகத்தின் ஜெயராமன் மதனகோபாலுக்கு இடம்; 2026 டி20 உலகக்கோப்பை நடுவர்களின் முழு விவரங்கள்
டி20 உலகக்கோப்பை 2026க்கான நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் முழு பட்டியல்

உலகக்கோப்பை நடுவர் பட்டியலில் தமிழகத்தின் ஜெயராமன் மதனகோபாலுக்கு இடம்; 2026 டி20 உலகக்கோப்பை நடுவர்களின் முழு விவரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 31, 2026
01:53 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான குழு நிலை போட்டிகளுக்கான நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து இடையிலான தொடக்க ஆட்டத்தில், இலங்கையின் குமார் தர்மசேனா மற்றும் நியூசிலாந்தின் வெய்ன் நைட்ஸ் ஆகியோர் கள நடுவர்களாகப் பணியாற்றுவார்கள்.

முக்கிய போட்டிகள்

முக்கியப் போட்டிகள் மற்றும் நடுவர்கள்

இந்தத் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான மோதலுக்கு (பிப்ரவரி 15), அனுபவம் வாய்ந்த நடுவர்களான ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் குமார் தர்மசேனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பிப்ரவரி 7 அன்று நடைபெறும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில் பால் ரீஃபெல் மற்றும் ராட் டக்கர் ஆகியோர் நடுவர்களாகச் செயல்படுவார்கள்.

பட்டியல்

2026 டி20 உலகக்கோப்பை போட்டி அதிகாரிகள் பட்டியல்

போட்டி நடுவர்கள் (Match Referees): டீன் கோஸ்கர், டேவிட் கில்பர்ட், ரஞ்சன் மதுகல்லே, ஆண்ட்ரூ பைக்ராஃப்ட், ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத். நடுவர்கள் (Umpires): ரோலண்ட் பிளாக், கிறிஸ் பிரவுன், குமார் தர்மசேனா, கிறிஸ் கஃப்பனி, அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பரோ, வெய்ன் நைட்ஸ், டொனோவன் கோச், ஜெயராமன் மதனகோபால் (தமிழகத்தைச் சேர்ந்தவர்), நிதின் மேனன், சாம் நோகாஜ்ஸ்கி, கே.என்.ஏ.பத்மநாபன், அல்லாஹுதீன் பலேக்கர், அஹ்சன் ரசா, லெஸ்லி ரீஃபர், பால் ரீஃபெல், லாங்டன் ருசெரே, ஷர்புத்தௌலா இப்னே ஷாஹித், காசி சோஹைல், ராட்னி டக்கர், அலெக்ஸ் வார்ஃப், ரவீந்திர விமலசிறி, ஆசிப் யாகூப்.

Advertisement

சிறப்பம்சங்கள்

நடுவர் குழுவின் சிறப்பம்சங்கள்

இந்தத் தொடரில் மொத்தம் 24 நடுவர்கள் பணியாற்ற உள்ளனர். இதில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயராமன் மதனகோபால் இடம்பெற்றுள்ளது தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெருமையான விஷயமாகும். மேலும், இந்தியாவின் சிறந்த நடுவரான நிதின் மேனன் மற்றும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் (போட்டி நடுவர்) ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர். சூப்பர் 8 மற்றும் நாக்-அவுட் சுற்றுகளுக்கான நடுவர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்.

Advertisement