Page Loader
சூர்யகுமார் யாதவுக்கு காயம்; ஆப்கான் டி20 தொடரில் அணியை வழிநடத்தப்போவது யார்?
சூர்யகுமார் யாதவுக்கு காயம்

சூர்யகுமார் யாதவுக்கு காயம்; ஆப்கான் டி20 தொடரில் அணியை வழிநடத்தப்போவது யார்?

எழுதியவர் Sekar Chinnappan
Dec 23, 2023
09:45 am

செய்தி முன்னோட்டம்

2024 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், நட்சத்திர கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது கணுக்காலில் சிக்கலை எதிர்கொண்டுள்ளார். இதனால், அடுத்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, டிசம்பர் 14 அன்று இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 ஆட்டத்தின் போது சூர்யகுமாருக்கு கணுக்காலில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து உடற்தகுதியை மீட்டெடுக்க அவர், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்துள்ளார்.

Who will lead Team India in Afhganistan Tour of India 2024

இந்திய அணியின் கேப்டனாக செயல்படப்போவது யார்?

முன்னதாக, 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியா காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். தனது காயத்திற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை பெற்று வரும் ஹர்திக், ஆப்கானிஸ்தான் தொடரின்போது அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையில், அவர் ஐபிஎல் 2024 தொடருக்கு முன் விளையாட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஹர்திக் பாண்டியாவும், சூர்யகுமார் யாதவும் இல்லாத நிலையில், ஆப்கானிஸ்தான் தொடரில் அணியை வழிநடத்தப்போவது உயர் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2024 ஜனவரி 11, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இந்தியா vs ஆப்கானிஸ்தான் டி20 தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.