ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்
செய்தி முன்னோட்டம்
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
மேலும் முதல் 10 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்தியராகவும் உள்ளார். நியூசிலாந்தின் மார்க் சாப்மேன் அதிகபட்சமாக 22 இடங்கள் முன்னேறி 35வது இடத்திலும், பாகிஸ்தானின் இப்திகார் அகமது 6 இடங்கள் முன்னேறி 38வது இடத்தையும் எட்டியுள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ராவல்பிண்டியில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டிக்கு பிறகு இருவரும் அந்த நிலையை அடைந்தனர்.
சாப்மேன் கடைசி இரண்டு டி20 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 71 ரன்களையும், 57 பந்தில் 104 ரன்களையும் குவித்து 290 ரன்களைக் குவித்து 48 வது இடத்திற்கு முன்னேறினார்.
riswan closes suryakumar yadav
சூர்யகுமார் யாதவை நெருங்கும் முகமது ரிஸ்வான்
நியூசிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியில் 98 ரன்கள் எடுத்த முகமது ரிஸ்வான் 811 புள்ளிகளை எடுத்து இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் 906 புள்ளிகள் எடுத்துள்ள நிலையில், ரிஸ்வான் சூர்யகுமாரை நெருங்கியுள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மூன்றாவது இடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளார்.
பந்துவீச்சு தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் யாரும் இல்லாத நிலையில், அர்ஷ்தீப் சிங் 13வது இடத்திலும், புவனேஷ்வர் குமார் 18வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் ஆல்ரவுண்டர் தரவரிசையில், வங்கதேசத்தின் ஷாஹிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ள நிலையில், இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.