LOADING...
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 12, 2023
07:39 pm

செய்தி முன்னோட்டம்

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், புதன்கிழமை (ஏப்ரல் 12) வெளியிடப்பட்ட ஐசிசி ஆடவர் டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் 906 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர்களான முகமது ரிஸ்வான் (811 புள்ளிகள்) மற்றும் பாபர் ஆசம் (755) ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரம் (748) நான்காவது இடத்திலும், நியூசிலாந்தின் டெவோன் கான்வே (745) இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக இந்திய வீரர்களில் விராட் கோலி 15வது இடத்தில் உள்ளார்.

ICC T20i rankings

பந்துவீச்சு டாப் 10 தரவரிசையில் இந்திய வீரர்கள் இல்லை

சமீபத்தில் முடிவடைந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கையின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். பந்துவீச்சு தரவரிசையில் டாப் 10 தரவரிசையில் இந்திய வீரர்கள் யாருமே இடம் பெறவில்லை. இதற்கிடையே ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் வங்கதேசத்தின் ஷாஹிப் அல் ஹசனும், மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தானின் முகமது நபியும் உள்ளனர்.