Page Loader
சொன்னதைச் செய்த சுனில் கவாஸ்கர்; வினோத் காம்ப்ளிக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க ஏற்பாடு
வினோத் காம்ப்ளிக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்தார் சுனில் கவாஸ்கர்

சொன்னதைச் செய்த சுனில் கவாஸ்கர்; வினோத் காம்ப்ளிக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க ஏற்பாடு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 15, 2025
12:00 pm

செய்தி முன்னோட்டம்

கடுமையான உடல்நலம் மற்றும் நிதி சவால்களை எதிர்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வினோத் காம்ப்ளிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் உதவியுள்ளார். முன்னதாக, சிறுநீர் தொற்று மற்றும் வலிப்பு காரணமாக டிசம்பர் 2023 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோத் காம்ப்ளி, தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்ந்து போராடி வருகிறார். 2013 இல் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்பளி இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவியிருந்த நிலையில், அதன் பின்னர் இது மிகப்பெரிய உடல்நலக் குறைவாக அமைந்தது. சமீபத்தில் மும்பையில் பயிற்சியாளர் ராமகாந்த் அச்ரேக்கரின் நினைவுச்சின்ன திறப்பு விழாவில் காம்ப்ளி காணப்பட்டார், இந்த நிகழ்வில் டெண்டுல்கரும் கலந்து கொண்டார்.

கவலை

முன்னாள் வீரர்கள் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை குறித்து கவலை

பார்வையாளர்கள் அவரது பலவீனமான நிலையைக் குறிப்பிட்டனர். அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே கவலையை ஏற்படுத்திய நிலையில், 1983 உலகக்கோப்பை வென்ற அணி சார்பில் அவருக்கு உதவ சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் முன்வந்தனர். இந்நிலையில், சுனில் கவாஸ்கர் 1999இல் நிறுவிய தனது CHAMPS அறக்கட்டளை மூலம் தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, CHAMPS அறக்கட்டளை வினோத் காம்ப்ளிக்கு வாழ்நாள் முழுவதும் மாதாந்திர உதவித்தொகை ₹30,000 மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக ஆண்டுக்கு ₹30,000 மானியம் ஏப்ரல் 1, 2025 முதல் வழங்கப்படும்.