NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் சாதனைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் சாதனைகள்
    ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் முக்கிய கிரிக்கெட் நிகழ்வுகள்

    ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் சாதனைகள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 30, 2023
    03:59 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக திடீரென அறிவித்திருக்கிறார்.

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது இங்கிலாந்து. இந்த போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தனது இந்த முடிவைத் தெரிவித்திருக்கிறார் ஸ்டூவர்ட் பிராடு.

    இந்த ஆஷல் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 150-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் ஸ்டூவர்ட் பிராடு.

    மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 600 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கடந்து தன்னுடைய கால்தடத்தைப் பதித்த ஸ்டூவர்ட் பிராடின் சிறந்த கிரிக்கெட்டிங் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு தான் இது.

    கிரிக்கெட்

    பாகிஸ்தானுக்கு எதிரான 169 ரன்கள்: 

    ஒரு வேகப்பந்து வீச்சாளராக அறியப்பட்டாலும், பேட்டிங் செய்து தனது அணிக்காக 3,600 ரன்களையும் குவித்திருக்கிறார் ஸ்டூவர்ட் பிராடு.

    2010-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அவரது முதல் தர சதமானது நினைவு கூறத்தக்க ஒன்று.

    அன்றைய போட்டியில் ஸ்டூவர்ட் பிராடு 102 ரன்கள் மட்டுமே குவித்திருக்க, 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி நின்றது இங்கிலாந்து. அன்றைய தினம் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சைச் சமாளித்து 297 பந்துகளுக்கு 169 ரன்களைக் குவித்து அசரடித்திருப்பார் ஸ்டூவர்ட் பிராடு.

    அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி, தனது அணியை இன்னிங்க்ஸ் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றிருப்பார் பிராடு.

    கிரிக்கெட்

    டெஸ்டி போட்டிகளில் இரண்டு ஹாட்-ட்ரிக்: 

    டெஸ்ட் போட்டிகளில் இரண்டு ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரே வீரர் ஸ்டூவர்ட் பிராடு மட்டுமே. 2011-ல் இந்தியாவிற்கு எதிராகவும், 2014-ல் இலங்கைக்கு எதிராகவும் இந்த இரண்டு ஹார்-ட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் அவர்.

    நாட்டிங்ஹாம் டெஸ்டில் எம்எஸ் தோனி தலைமையில் இந்தியா சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த போது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார் ஸ்டூவர்ட் பிராடு. அந்தப் போட்டியில் 319 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றிருக்கும்.

    ஆனால், இலங்கைக்கு எதிராக அவரது ஹாட்-ட்ரிக் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கைகொடுக்காமல், இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கும்.

    கிரிக்கெட்

    டி20 கேப்டனான ஸ்டூவர்ட் பிராடு: 

    2011-ம் ஆண்டு பால் காலிங்வுட்டுக்கு அடுத்தபடிாக ஸ்டூவர்ட் பிராடை இங்கிலாந்து அணியின் டி20 கேப்டனாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

    2010-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பையில் ஸ்டூவர்ட் பிராடின் சிறப்பான பங்களிப்பை மனதில் கொண்டு இந்த கேப்டன்சி வாய்ப்பை அவருக்கு வழங்கியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

    2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டிகளில் ஸ்டூவர்ட் பிராடின் தலைமையிலேயே உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றது இங்கிலாந்து அணி.

    அதன் பின்னர், 2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் டி20 கேப்டன்சியானது ஸ்டூவர்ட் பிராடிடம் இருந்து இயன் மார்கனிடம் கொடுக்கப்பட்டது.

    கிரிக்கெட்

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான சிறந்த ஆட்டம்: 

    2020-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இங்கிலாந்திலேயே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஸ்டூவர்ட் பிராடை விளையாடும் 11-ல் இருந்து வெளியேற்றியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

    அப்போதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதைப் பரிசீலித்திருக்கிறார் ஸ்டூவர்ட் பிராடு. ஆனால், அந்த முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வியைத் தழுவவே, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியின் விளையாடும் 11-ல் சேர்க்கப்பட்டார் ஸ்டூவர்ட் பிராடு.

    தான் விளையாடி அந்த இரு போட்டிகளில் மட்டும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு பெரிய கம்பேக் கொடுத்திருப்பார் பிராடு. மேலும், அந்தத் தொடரிலேயே தன்னுடைய 500-வது விக்கெட்டையும் வீழ்த்தியிருப்பார் அவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    இங்கிலாந்து
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கிரிக்கெட்

    டெஸ்டில் 600 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர்; ஸ்டூவர்ட் பிராட் சாதனை டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய இரட்டை சாதனை படைத்த மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்
    IND vs WI 2வது டெஸ்ட் : தடுமாறிய இந்தியாவை தூக்கி நிறுத்திய விராட் கோலி விராட் கோலி
    சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்; எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா

    இங்கிலாந்து

    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா
    பழிக்கு பழி: இங்கிலாந்து தூதரகத்தின் பாதுகாப்பை குறைத்த இந்தியா இந்தியா
    இந்தியாவின் பதிலடியை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய இங்கிலாந்து இந்தியா
    இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை இந்தியா

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    ரயில் நிலையத்தில் பை திருட்டு : ட்விட்டரில் கோபமாக பதிவிட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்
    சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : நாடு திரும்புகிறாரா மார்க் வுட்? சிக்கலில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    சிஎஸ்கே அணியில் இடமில்லை! பிளேஆப் சுற்றுக்கு முன்பாகவே நாடு திரும்புகிறார் பென் ஸ்டோக்ஸ்! ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025