ஐபிஎல் 2024இல் பங்கேற்பதாக அறிவித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் 2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்வதாக அறிவித்துள்ளார். தற்போதைய ஐபிஎல் சீசனில் இடம்பெறாத ஸ்மித், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய சமீபத்திய கேள்வி பதில் பிரிவின் போது அதை உறுதிப்படுத்தினார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் காயம் அடைந்த கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக ஸ்மித் கருதப்பட்டாலும், அவர் ஏலத்தில் பதிவு செய்யவே இல்லை என்று தெரிவித்தார். வீடியோவில், ஐபிஎல் 2023 க்கு அவர் கிடைப்பது குறித்து கேட்கப்பட்டதற்கு, ஸ்மித் "ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இது மிகவும் பெரிய ஆண்டு என்பதால் ஏலத்தில் எனது பெயரை பதியவில்லை" என்று பதிலளித்தார். ஆஸ்திரேலியா இந்த ஆண்டு முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது.