Page Loader
SLvsAFG: போராடிய இலங்கை, ஆஃப்கானுக்கு 292 ரன்கள் இலக்கு!
போராடிய இலங்கை, ஆஃப்கானுக்கு 292 ரன்கள் இலக்கு

SLvsAFG: போராடிய இலங்கை, ஆஃப்கானுக்கு 292 ரன்கள் இலக்கு!

எழுதியவர் Prasanna Venkatesh
Sep 05, 2023
07:08 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பைத் தொடரின் ஆறாவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனாகா. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணாரத்னே ஆகியோர் களமிங்கினர். ஓரளவு சிறப்பான தொடக்கத்தையே அவர்கள் கொடுத்தாலும், 10வது ஓவரில் இருந்து 16வது ஓவருக்குள் 88 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை. ஐந்தாவது ஆட்டக்காரராக களமிறங்கிய சரித் அசலங்காவும், மூன்றாவதாக களமிறங்கி ஆடிக்கொண்டிருந்த குசால் மெண்டிஸூம் கைகோர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர்.

ஆசிய கோப்பை

மீண்டும் சறுக்கிய இலங்கை: 

33வது ஓவரில் அசலங்கா ஆட்டமிழந்த பிறகு, பெரிய பார்ட்னர்ஷிப் எதுவும் அமையவில்லை. பின்பு 38 மற்றும் 39வது ஓவர்களில் 92 ரன்களைக் குவித்து நான்றாக ஆடிக்கொண்டிருந்த குசால் மெண்டிஸூடன் சேர்த்து 3 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில், குல்பதின் நைப் நான்கு விக்கெட்டுகளையும், ரஷித் கான் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். முகமது நைப் 3.50 என்ற எக்கானமியில் ரன்களைக் கட்டுப்படுத்தினார். ஆட்டத்தின் முதல் பாதியில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்களைக் குவித்து, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 292 ரன்களை இலக்காக நிர்ணியித்திருக்கிறது இலங்கை.