ஆசிய கோப்பை, SLvsAFG: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யும் இலங்கை
ஆசிய கோப்பைத் தொடரில் இன்று (செப்டம்பர் 5) இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியே ஆசிய கோப்பையின் குழுச் சுற்றுப் போட்டிகளில் கடைசி போட்டியாகவும் அமைந்திருக்கிறது. இந்தப் போட்டியின் முடிவுகளைக் கொண்டே, B பிரிவைச் சேர்ந்த எந்த அணி சூப்பர் 4 சுற்றில் நாளை பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது என்பது நிர்ணயிக்கப்படவிருக்கிறது. ஆசிய கோப்பைத் தொடரில் இன்று விளையாடப்படவிருக்கும் ஆறாவது போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறது இலங்கை கிரிக்கெட் அணி. இன்றைய போட்டியில் இலங்கை அணி வெல்லும் பட்சத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் நேரடியாக சூப்பர் 4 சுற்றுக்கத் தகுதி பெறும்.
விளையாடும் 11:
இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்கான் அணி வெற்றிபெறும் பட்சத்தில், மூன்று அணிகளின் ரன்ரேட்டைக் கொண்டு சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் அணிகள் முடிவு செய்யப்படும். இரு அணிகளின் விளையாடும் 11 பின்வருமாறு, இலங்கை: பதும் நிசங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மென்டிஸ், சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்செயா டி சில்வா, தசுன் சனாகா, துனித் வெல்லலகா, மகீஷ் தீக்ஷனா, கசூன் ரஜிதா மற்றும் மதீஷா பதிரானா. ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸாத்ரான், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷாகிடி, நஜிபுல்லா ஸாத்ரான், முகமது நபி, குல்பதின் நைப், கரிம் ஜானட், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் பசலாக் ஃபரூக்கி.