NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய செய்திகள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய செய்திகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 14, 2024
    09:02 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடி வருகிறது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.

    இந்த தொடரின் முதல் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில், 4 விக்கெட்டுகளை கைப்பற்றி டிம் செளத்தி, தனது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    கூடுதலாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் டிம் செளத்தி புரிந்துள்ளார்.

    card 2

    தமிழ்நாடு வாலிபால் லீக்: சென்னை அணி சாம்பியன்

    முதல்முறையாக, தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டிகள், சென்னை மைலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 6 அணிகள் கலந்து கொண்டன.

    இந்த தொடரின் இறுதி போட்டியில் சென்னை ராக்ஸ்டார்ஸ் மற்றும் கடலூர் வித் அஸ் அணிகள் மோதின.

    இதில் சென்னை ராக்ஸ்டார்ஸ் அணி 21-17, 21-16, 21-19 என புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

    வெற்றி பெற்ற அணிக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை வழங்கினார்.

    card 3

    ஒலிம்பிக் ஹாக்கி தகுதி சுற்றில் இந்திய அணி தோல்வி

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான மகளிர் ஹாக்கி தகுதி சுற்று ராஞ்சியில் நேற்று துவங்கியது. இந்த தகுதி சுற்றில் போட்டியிட 8 அணிகள் வந்தன.

    இத்தொடரின் 'பி' பிரிவில் இடம் பெற்றிருந்த நேற்று தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டது.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

    இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று நியூஸிலாந்துடன் மோதுகிறது.

    இந்திய நேரப்படி, இந்த ஆட்டம் இன்று இரவு 7:30க்கு தொடங்கவிருக்கிறது.

    card 4

    துப்பாக்கி சுடுதல் ஒலிம்பிக் தகுதி சுற்று: இந்தியாவின் விஜய்வீர் சித்து வெற்றி 

    இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதி போட்டிகளின் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது.

    இதில் இந்தியாவின் விஜய்வீர் சித்து 28 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    அதோடு, இந்தாண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

    கஜகஸ்தானின் நிகிதா சிர்யுகின் 32 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், கொரியாவின் ஜோங் ஹோ 23 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

    இதுவரை பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 17 பேர் தகுதி பெற்றுள்ளனர்

    card 5

    ஆஸ்திரேலிய ஓபன் இன்று தொடக்கம்

    மிகவும் எதிர்பார்க்கப்படும் 2024ஆம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று தொடங்குகிறது.

    தொடக்க நாளில் நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், குரோஷியாவின் டினோ ப்ரிஸ்மிக்குடன் மோதுகிறார்.

    மறுபுறம், இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர், நெதர்லாந்தின் போட்டிக் வான் டி சாண்ட்ஸ்கல்புடன் மோதுகிறார்.

    மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் அரினா சபெலங்கா, ஜெர்மனியின் எல்லா சீடலுடன் மோதுகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட் செய்திகள்
    கிரிக்கெட்
    விளையாட்டு வீரர்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கிரிக்கெட் செய்திகள்

    டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்த கேள்விக்கு ரோஹித் ஷர்மா பதில் ரோஹித் ஷர்மா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் புள்ளிவிபரம் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    வீரர்களுக்கு ஐபிஎல்லில் பங்கேற்க தடையில்லா சான்றிதழ் வழங்க ஆப்கான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு ஆப்கான் கிரிக்கெட் அணி
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியாவின் தொடர் தோல்விக்கு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் நடிகர் சூர்யா
    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு  ஜெகன் மோகன் ரெட்டி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் டெஸ்ட் கிரிக்கெட்
    2023ம் ஆண்டில் மட்டும் 2006 ரன்கள்.. புதிய சாதனை படைத்த விராட் கோலி! விராட் கோலி

    விளையாட்டு வீரர்கள்

    மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்:  மத்திய அமைச்சர்  இந்தியா
     மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு   இந்தியா
    2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் முடிவிலிருந்து பின்வாங்கியது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
    கொரியா ஓபன் பாட்மின்டன் தொடரின் இறுதிப்போட்டியில் வென்றது இந்தியா  தென் கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025