NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 10, 2024
    07:47 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா மகளிர் அணி.

    நேற்று மும்பையில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இதன் மூலம், இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி.

    முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது.

    எனினும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.

    இதையடுத்து தற்போது நடைபெற்ற டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது ஆஸ்திரேலியா மகளிர் அணி.

    card 2

    பிசிசிஐ உடன் கை கோர்க்கும் புதிய ஸ்பான்சர்கள்

    பிசிசிஐ சார்பாக இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

    ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா (Campa) மற்றும் ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் (Atomberg Technologies) நிறுவனங்களை புதிய ஸ்பான்சர்களாக பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் இவ்விரு நிறுவனங்கள் ஸ்பான்சர்களாக செயல்படுவார்கள்.

    இந்த ஒப்பந்தம் நடப்பாண்டு முதல், 2026 ஆண்டு வரை தொடரும் எனவும், தற்போது நடைபெறவுள்ள இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரிலிருந்தே இது தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது

    card 3

    ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கப்பதக்கம் வென்ற ருத்ராங்ஷ்- மெகுலி ஜோடி

    இந்தோனேசியாவின் ஜாக்கர்த்தாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்தியாவை சேர்ந்த ருத்ராங்ஷ் பட்டீல், மெகுலி கோஷ் ஜோடி 16-10 என்ற புள்ளி கணக்கில் சென் யுபான்-ஜூ மிங்ஷூய் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.

    இந்த போட்டியில் இந்தியா வென்ற 5-வது தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதோடு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவை சேர்ந்த அர்ஜூன் சிங் சீமா-ரிதம் சங்வான் கூட்டணி வெள்ளிப்பதக்கதை கைப்பற்றியது

    card 4

    கேப்டவுன் பிட்ச் திருப்தியற்றது: ஐசிசி 

    சமீபத்தில் நடந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற கேப்டவுன் பிட்ச் 'திருப்தியற்றது' என ஐசிசி தர நிர்ணயம் செய்துள்ளது.

    கேப்டவுன் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் மிக துரிதமாக முடிவடைந்த போட்டி என்ற சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    அந்த மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி ஆட்டத்தின் முதல் நாளே, 23 விக்கெட்கள் சரிந்தன.

    ஆட்டத்தில் மொத்தம் 642 பந்துகளே வீசப்பட்டது. உலக டெஸ்ட் போட்டி வரலாற்றில், குறைந்த பந்துகளில் முடிவடைந்த போட்டியாக இது மாறிய பிறகு தான் இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.

    card 5

    மலேசிய ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு முன்னேறிய கிடாம்பி ஸ்ரீகாந்த்

    மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியா சார்பாக விளையாடிவரும் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டி தொடரில், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பங்கேற்றுள்ள ஸ்ரீகாந்த், தற்போது 24-வது இடத்தில் உள்ளார்.

    இவர், உலகத் தரவரிசை பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியுடன் மோதி 12-21, 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    தொடர்ந்து நடைபெறவுள்ள 2-வது சுற்றில் கிடாம்பி முன்னாள் உலக நம்பர் ஒன் வீரரான ஹாங்காங்கின் லாங் அங்கஸுடன் மோதுவார் ஸ்ரீகாந்த்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    டி20 உலகக்கோப்பை
    மகளிர் டி20 உலகக் கோப்பை
    மகளிர் கிரிக்கெட்

    சமீபத்திய

    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்

    டி20 கிரிக்கெட்

    இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது T20I : ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயம் இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது T20I : இந்தியா வெற்றி; 4-1 என தொடரை கைப்பற்றியது இந்தியா vs ஆஸ்திரேலியா

    டி20 உலகக்கோப்பை

    இதே நாளில் அன்று: மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 கோப்பையை வென்ற தினம் டி20 கிரிக்கெட்
    2007 மாடலை கையிலெடுக்கும் பிசிசிஐ! ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தல்! பிசிசிஐ
    2024 டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்துக்கு மாற்ற ஐசிசி திட்டம்! ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை
    டி20 கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்; சியாஸ்ருல் இட்ரஸ் சாதனை டி20 கிரிக்கெட்

    மகளிர் டி20 உலகக் கோப்பை

    ஐசிசி மகளிர் U-19 டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா! பெண்கள் கிரிக்கெட்
    ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்து அணியின் முக்கிய புள்ளி விபரங்கள்! ஐசிசி
    ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் இந்தியா! பெண்கள் கிரிக்கெட்
    மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா? ஐசிசி

    மகளிர் கிரிக்கெட்

    சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற சாதனை படைக்கும் டேனியல் மெக்கஹே கிரிக்கெட்
    'மீண்டும் விளையாட வாய்ப்பு கொடுங்கள்' : ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை உருக்கம் ஆப்கான் கிரிக்கெட் அணி
    சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு நாடுகளுக்காக விளையாடி மஹிகா கவுர் சாதனை கிரிக்கெட்
    ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி இந்திய கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025