Sports Round Up: இமாலய வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா; பதக்க வேட்டையில் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சிறப்பாக அணிய ஆஸ்திரேலிய பேட்டர்களில் டேவிட் வார்னர் மற்றும் கிளென் மேக்ஸ்வெஸ் ஆகிய இருவரும் சதம் கடந்து அசத்தினர். இரு சதங்களின் விளைவாக 399 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது ஆஸ்திரேலியா.
400 என்ற இலக்கை நோக்கி சேஸிங்கைத் தொடங்கிய நெதர்லாந்து அணி தொடங்கிய வேகத்திலேயே சுருண்டது. வெறும் 21 ஓவர்களில் 90 ரன்களை மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நெதர்லாந்து அணி.
309 ரன்கள் என்ற மாபெரும் ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வெற்றி கொண்டது ஆஸ்திரேலியா.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து சீனாவில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதலிரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய 34 பதக்கங்களை வென்றிருந்த நிலையில், மூன்றாவது நாளான நேற்று மட்டும் 30 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.
மூன்றாவது நாளில் 6 தங்கம், 8 வெள்ளி மற்றும் 16 வெண்கலப் பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கின்றனர் இந்திய வீரர்கள். ஒட்டுமொத்தமாக 64 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஆறாவது இடம் பிடித்திருக்கிறது இந்தியா.
முதல் மூன்று இடங்களில் 300, 73 மற்றும் 79 பதக்கங்களுடன் முறையே சீனா, ஈரான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.
பாட்மின்டன்
பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன்:
பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் தொடரானது கடந்த அக்டோப்ர 24ம் தேதி தொடங்கி பாரிஸில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் சார்பில் பல்வேறு பாட்மின்டன் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
முதல் நாளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணையும் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருந்தனர்.
இரண்டாவது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் கிடம்பி ஸ்ரீநாத் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
முதல் சுற்றிலேயே இருவரும் பிரான்சு வீரர்களும் தோல்வியைத் தழுவி பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறியிருக்கின்றனர்.
இத்தொடரின் இரண்டாவது சுற்றில் இன்று விளையாடுகிறார் பி.வி.சிந்து.
கிரிக்கெட்
தொடர்ச்சியாக மூன்று நான்கு விக்கெட் ஹால்களைப் பெற்ற ஆடம் ஸாம்பா:
உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
இந்தப் போட்டியில் வெறும் 3 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் அந்த அணியின் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா. முன்னதாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் 4 வகிக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருப்பார் அவர்.
இத்துடன் உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றவதாக இணைந்திருக்கிறார் அவர். முன்னதாக இதே சாதனையை பாகிஸ்தான் அணியின் ஷாகித் அஃப்ரிடி மற்றும் இந்தியாவின் முகமது ஷமி ஆகிய இருவரும் செய்திருக்கின்றனர்.
கிரிக்கெட்
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்:
நெதர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நேற்றைய போட்டியில் 91 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார் டேவிட் வார்னர். தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார் அவர்.
நேற்றைய சதத்துடன் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றையும் சமன் செய்திருக்கிறார் டேவிட் வார்னர். உலகக்கோப்பையில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில்ஆறு சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
ஆறு சதங்களுடன் இந்தப் பட்டியலில் சச்சின் மற்றும் வார்னர் இருவரும் இரண்டாம் இடத்திலேயே இருக்கின்றனர். ஏழு சதங்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா.