
Sports Round Up : இந்திய பேட்மிண்டன் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்; இலங்கை இறுதிப்போட்டிக்கு தகுதி; டாப் விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
வியட்நாம் ஓபன் சூப்பர் 100 பேட்மிண்டன் போட்டியில் இந்திய இரட்டையர் ஜோடியான சிம்ரன் சிங்கி மற்றும் ரித்திகா தாக்கர் வியாழக்கிழமை (செப்.14) காலிறுதிக்கு முன்னேறினர்.
மூன்றாம் நிலை வீராங்கனைகளான சிம்ரன் மற்றும் ரித்திகா ஜோடி, 21-10, 21-18 என்ற செட் கணக்கில் மலேசிய ஜோடியான லீ ஜி கிங் மற்றும் டிசைரி ஹாவ் ஷான் சியோவை வீழ்த்தியது.
இதையடுத்து காலிறுதியில் சீன தைபேயின் ஜியாங் யி-ஹுவா மற்றும் லீ ஜி குயிங் ஜோடியை எதிர்கொள்கிறது.
இதற்கிடையே, ஒற்றையர் பிரிவில் அதிதி பட், தன்யா ஹேமந்த், கலப்பு இரட்டையர் பிரிவில் பொக்கா நவநீத்-குக்கப்பள்ளி மனீஷா, சனாயத் ஜோஷி-காவ்யா குப்தா, இரட்டையர் பிரிவில் சதீஷ்குமார் கருணாகர-ஆத்யா வரியாத், காவ்யா குப்தா-தீப்ஷிகா சிங் தோல்வியைத் தழுவி வெளியேறினர்.
India adds 22 players to Asian Games Contingent
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு கூடுதலாக 22 வீரர்களை அனுப்பும் இந்தியா
செப்டம்பர் 23 அன்று தொடங்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியக் குழுவின் திருத்தப்பட்ட பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் வியாழக்கிழமை(செப்டம்பர் 14) வெளியிட்டது.
இந்த திருத்தப்பட்ட பட்டியலில் கூடுதலாக 22 விளையாட்டு வீரர்கள் சேர்க்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணைப் பணியாளர்களில் 25 பேரை மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இந்த கூடுதல் அறிவிப்பில் மாடர்ன் பென்டத்லான் விளையாட்டிற்கும் இந்தியா வீரர்களை அனுப்புவதால், இந்தியாவின் பங்கேற்பு மொத்தம் 39 விளையாட்டுகளாக அதிகரித்துள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி, ஆசிய போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் 655 விளையாட்டு வீரர்கள் மற்றும் 260 பயிற்சியாளர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் உட்பட, இந்திய குழுவில் 921 பேர் இடம் பெற்றுள்ளனர்.
Srilanka enters final in asia cup 2023
ஆசிய கோப்பையில் இலங்கை கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
வியாழக்கிழமை (செப்டம்பர் 14) நடந்த ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முன்னதாக மழையால் போட்டி 42 ஓவர்களான குறைக்கப்பட்ட நிலையில், இலங்கை அணி கடைசி பந்தில் தேவைப்பட்ட 2 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் குஷால் மெண்டிஸ் 91 ரன்களும், மதீஷ பத்திரன 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதன் மூலம் 12வது முறையாக ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.
Australian Cricket mandates neck band for players
வீரர்களுக்கு கழுத்து பாதுகாப்பு பட்டையை கட்டாயமாக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அக்டோபர் 1 முதல் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் தங்கள் வீரர்கள் அனைவரும் கழுத்து பாதுகாப்பு கவசத்தை அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், வீரர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25, 2014 அன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நியூ சவுத் வேல்ஸுக்கு எதிரான ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் வெஸ்ட் எண்ட் ரெட்பேக்ஸ் அணிக்காக பேட்டிங் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ் ஒரு பவுன்சரால் கழுத்தின் பின்புறத்தில் தாக்கப்பட்டார்.
பிலிப் ஹியூஸின் மறைவுக்குப் பிறகு, கழுத்து பாதுகாப்பு பட்டைகள் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Wait for Ind vs Pak Asia Cup final continues
மீண்டும் கனவாகிப் போன இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி
கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியும் ஒன்று.
கொழும்பில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இலங்கை தோற்கடித்ததால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு மீண்டும் கனவாகிப் போயுள்ளது.
ஆசியக் கோப்பையின் ஒருநாள் வடிவத்தில் இரு அணிகளும் 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, அதில் 8ல் இந்தியாவும், 5ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
இரண்டு போட்டிகள் முடிவு இல்லாமல் முடிவடைந்தது. ஆனால் ஆசிய கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதவில்லை.