மில்லருக்குப் பதில் இவரா? டி20 உலகக்கோப்பைக்கு முன்பே தென்னாப்பிரிக்க அணிக்கு வந்த சோதனை! அணியில் இணைந்த புதிய வீரர்கள்!
செய்தி முன்னோட்டம்
பிப்ரவரி 7, 2026 அன்று தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. SA20 தொடரில் ரிக்கெல்டனின் அபாரமான ஆட்டம் அவருக்கு மீண்டும் அணியில் இடம் பெற்றுத் தந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர பினிஷர் டேவிட் மில்லரின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. SA20 தொடரில் விளையாடும் போது அவருக்கு ஏற்பட்ட இடுப்புப் பகுதி காயம் காரணமாக, அவர் உலகக்கோப்பையில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஒருவேளை மில்லர் குணமடையத் தவறினால், அது தென்னாப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டருக்குப் பெரும் பின்னடைவாக அமையும்.
காயம்
காயம் அடைந்த மற்ற வீரர்கள்
மில்லர் மட்டுமல்லாது, தென்னாப்பிரிக்க அணியின் மேலும் சில முக்கிய வீரர்களும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அதன்படி, டோனோவன் ஃபெரீரா தோள்பட்டை எலும்பு முறிவு காரணமாக அணியிலிருந்து விலகும் நிலையில் உள்ளார். டோனி டி ஜோர்ஜி தொடைப்பகுதி காயம் காரணமாக தீவிர சிகிச்சையில் உள்ளார். லுங்கி என்கிடிக்கும் சமீபத்தில் சிறிய அளவிலான தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அணி
உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா அணி
அணி வீரர்களின் பட்டியல்: ஐடன் மார்க்ரம் (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் ப்ரீவிஸ், குயின்டன் டி காக், மார்கோ ஜான்சன், ஜார்ஜ் லிண்டே, கேசவ் மஹராஜ், குவேனா மபாகா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ். ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஐசிசி விதிமுறைப்படி அணியில் இறுதி மாற்றங்களைச் செய்ய கால அவகாசம் உள்ளது.