Page Loader
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில்

எழுதியவர் Sekar Chinnappan
May 03, 2023
06:55 pm

செய்தி முன்னோட்டம்

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை (மே 3) அறிவித்தார். மகளிர் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஷப்னிம் இஸ்மாயில், 241 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 317 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்காக ஷப்னிம் இஸ்மாயில் கடைசியாக 2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடினார். ஜனவரி 2007 இல் பிரிட்டோரியாவில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஷப்னிம் 127 ஒருநாள் போட்டிகளில் 191 விக்கெட்டுகளை எடுத்தார். இந்திய வீரர் ஜூலன் கோஸ்வாமிக்கு (255 விக்கெட்) அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஷப்னிம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் ஆவார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post