அடுத்த செய்திக் கட்டுரை

புரோ கபடி லீக் : ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்தும் குஜராத் ஜெயன்ட்ஸ்
எழுதியவர்
Sekar Chinnappan
Dec 06, 2023
01:50 pm
செய்தி முன்னோட்டம்
செவ்வாயன்று (டிசம்பர் 5) அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டேடியாவின் இகேஏ அரங்கில் யு மும்பாவை எதிர்த்து 39-37 என்ற கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றது.
கேப்டனாக ஃபெசல் அட்ராச்சலியின் 100வது ஆட்டம் இது என்பது குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு வெற்றியை மேலும் சிறப்பாக்கியது. முன்னதாக, போட்டி ஆரம்பமான சில நிமிடங்களில் யு மும்பா 7-5 என முன்னிலை பெற்றது.
அதன் பின்னர் குஜராத் ஜெயன்ட்ஸ் 7வது நிமிடத்தில் தங்கள் துருப்புச் சீட்டான சோனுவைக் களமிறக்கினர். அவர் ஆரம்பத்தில் சரியாக செயல்படவில்லை என்றாலும், பின்னர் அபாரமாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதன் மூலம் நடப்பு புரோ கபடி லீக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
குஜராத் ஜெயன்ட்ஸ் ஹாட்ரிக் வெற்றி
𝐆𝐢𝐚𝐧𝐭 Hat-trick! 🔥#GGvMUM pic.twitter.com/jcM1NKqqj7
— Gujarat Giants (@GujaratGiants) December 5, 2023