LOADING...
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு விரைவில் திருமணம்; இசையமைப்பாளரை கரம்பிடிக்கிறார்
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு விரைவில் திருமணம்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு விரைவில் திருமணம்; இசையமைப்பாளரை கரம்பிடிக்கிறார்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 19, 2025
09:26 am

செய்தி முன்னோட்டம்

இந்திய மகளிர் கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா, விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இசையமைப்பாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான பலாஷ் முச்சால் பொதுவெளியில் தங்கள் உறவை உறுதிப்படுத்தி, தங்கள் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்தியா மோதும் முக்கியப் போட்டிக்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை அன்று மாநிலப் பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து 30 வயதான பலாஷ் முச்சால் இந்த எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டார். "அவர் விரைவில் இந்தூரின் மருமகளாகி விடுவார். இதை மட்டும் நான் இப்போது சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கான தலைப்பை நான் கொடுத்துவிட்டேன்." என்று பலாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதல்முறை

முதல்முறையாக உறவை உறுதிப்படுத்தினர்

இந்த ஜோடி அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தாலும், அவர்களின் உறவு மற்றும் திருமணம் குறித்து பொதுவெளியில் உறுதிப்படுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும். இந்த முக்கியச் செய்திக்கு மத்தியில், ஸ்மிருதி மந்தனா இந்தூரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பைப் போட்டிக்காகத் தயாராகி வருகிறார். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முந்தைய இரண்டு ஆட்டங்களில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், அரையிறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. பலாஷ் முச்சால், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் மந்தனா ஆகிய இருவருக்கும் வரவிருக்கும் ஆட்டத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.