Page Loader
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் அயர்லாந்து
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் அயர்லாந்து

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் அயர்லாந்து

எழுதியவர் Sekar Chinnappan
Apr 24, 2023
07:56 pm

செய்தி முன்னோட்டம்

இலங்கைக்கு எதிராக காலேயில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி அரைசதம் விளாசினார். முதல் டெஸ்டுடன் ஒப்பிடுகையில் அயர்லாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆண்ட்ரூ பால்பிர்னி 95 ரன்கள் எடுத்ததன் மூலம் அயர்லாந்துக்காக டெஸ்டில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை ஆண்ட்ரூ பால்பிர்னி படைத்துள்ளார். தனது ஆறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஆண்ட்ரூ பால்பிர்னி 24.54 சராசரியுடன் 270 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று அரைசதங்களும் அடங்கும். இதன் மூலம் பால்பிர்னி தனது ஆட்டத்தின் போது கெவின் ஓ பிரையனின் 258 ரன்களை முந்தினார்.

Ire vs SL 2nd Test day 1

இலங்கைக்கு எதிராக அயர்லாந்து முதல் இன்னிங்ஸ் ஹைலைட்ஸ்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வந்த வேகத்தில் வெளியேறிய நிலையில், மூன்றாவது இடத்தில் களமிறங்கிய கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 163 பந்துகளில் 14 பவுண்டரிகள் உட்பட 95 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹாரி டெக்டர் 18 ரன்களில் வெளியேறிய நிலையில், பால் ஸ்டிர்லிங் 74 ரன்கள் எடுத்து ரிட்டயர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார். லோர்கன் டக்கர் 78 ரன்களுடனும் கர்டிஸ் கேம்பர் 27 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில், அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்து வலுவாக உள்ளது.