IRE vs SL இரண்டாவது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் அயர்லாந்து
இலங்கைக்கு எதிராக காலேயில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து அணி சிறப்பான பேட்டிங்கால் முன்னணியில் உள்ளது. அயர்லாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 492 ரன்களை அடித்தது. பால் ஸ்டிர்லிங் மற்றும் கர்டிஸ் கேம்பர் இருவரும் சதமடித்து, நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்காக சதமடித்த மூன்றாவது மற்றும் நான்காவது வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்து கிரிக்கெட் அணி ஒரு இன்னிங்சில் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னர் 2018 இல் பாகிஸ்தானுக்கு எதிராக 339 ரன்கள் எடுத்திருந்தது தான் சாதனையாக இருந்தது.
6வது முறையாக 5 விக்கெட் வீழ்த்திய பிரபாத் ஜெயசூர்யா
முதல் இன்னிங்சில் இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அவர் தனது ஆறாவது ஐந்து விக்கெட்டுகளை பதிவு செய்து ஏழு போட்டிகளில் மொத்தம் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்துள்ளனர். திமுத் கருணாரத்னே 39 ரன்களுடனும், நிஷான் மதுஷ்கா 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக முதல் டெஸ்டில் இலங்கை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.