LOADING...
INDvsSA டெஸ்ட் தொடரிலிருந்து ஷுப்மன் கில் விடுவிப்பு; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
INDvsSA டெஸ்ட் தொடரிலிருந்து ஷுப்மன் கில் விடுவித்ததாக பிசிசிஐ அறிவிப்பு

INDvsSA டெஸ்ட் தொடரிலிருந்து ஷுப்மன் கில் விடுவிப்பு; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2025
12:27 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கௌஹாத்தியில் தொடங்கவிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொல்கத்தா டெஸ்ட் போட்டியின்போது கழுத்தில் சுளுக்கு (neck spasm) ஏற்பட்ட கில், தனது உடல் தகுதியை நிரூபிக்க கௌஹாத்திக்கு பயணம் செய்தபோதும், தற்போது ஓய்வுக்காக மும்பை சென்றுள்ளார். கில் விலகியதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பண்ட் இந்திய அணியை வழிநடத்துவார். முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு, தொடரை சமன் செய்ய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானதாகும்.

உடல்நிலை

உடல்நிலை முன்னேற்றத்தில் கவனம்

பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர், கில்லின் உடல்நிலை முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்படும் என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். மாற்று கேப்டன் ரிஷப் பண்ட், செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஷுப்மன் இந்தப் போட்டியில் விளையாட மிகவும் விரும்பினார். ஆனால், உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். கில்லின் காயத்தால், விக்கெட் கீப்பர்-பேட்டரான துருவ் ஜூரெல் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, ஷுப்மன் கில், நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்குள் முழு உடற்தகுதி பெறுவாரா என்பது இப்போதைக்குத் தெரியவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post