
ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக ஷுப்மன் கில் இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக நியமனம்; பிசிசிஐ அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. இதில் முக்கியமான முடிவாக, நட்சத்திர ஆட்டக்காரர் ஷுப்மன் கில் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அணி அறிவிப்புடன், மார்ச் 2025 இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கேப்டன் நியமனம் குறித்துப் பேசிய தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், ரோஹித் ஷர்மாவை நீக்குவது கடினமான முடிவு என்றாலும், அணியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே இந்த மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
வழியனுப்பும் போட்டி
வழியனுப்பும் தொடராக இருக்கலாம் என தகவல்
இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர். இந்நிலையில், வரவுள்ள ஆஸ்திரேலிய தொடரில் கேப்டன் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், இந்த தொடர் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் இறுதி தொடராக இருக்கலாம் எனவும், இதை அவர்களுக்கான வழியனுப்பும் தொடராக பிசிசிஐ திட்டமிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. ஒருநாள் போட்டிகளில் கேப்டனாகக் ஷுப்மன் கில்லுக்கு அதிக அனுபவம் இல்லையென்றாலும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வலுவான தலைமைப் பதிவைக் கொண்டுள்ளார். அனுபவம் மற்றும் இளம் வீரர்களின் கலவையுடன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 அணி
டி20 அணியும் அறிவிப்பு
ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான அணியுடன், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 கிரிக்கெட் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணி: ஷுப்மன் கில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் படேல், கே.எல்.ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால். டி20 அணி: சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில், திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.
போட்டி
போட்டி அட்டவணை
டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடரும் நிலையில், துணை கேப்டனாக ஷுப்மன் கில் தொடர்கிறார். போட்டிகளை பொறுத்தவரை அக்டோபர் 19 அன்று பெர்த் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியுடன் தொடங்குகிறது. அக்டோபர் 23இல் அடிலெய்டில் இரண்டாவது மற்றும் அக்டோபர் 25இல் சிட்னியில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளன. கான்பெராவில் அக்டோபர் 29, மெல்போர்னில் அக்டோபர் 31, ஹோபார்ட்டில் நவம்பர் 2, கோல்டு கோஸ்டில் நவம்பர் 6 மற்றும் பிரிஸ்பேனில் நவம்பர் 8 அன்று டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.