
இந்திய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில்லை நியமிக்க பிசிசிஐ முடிவு; துணை கேப்டன் ஆகிறார் ரிஷப் பண்ட்
செய்தி முன்னோட்டம்
ரோஹித் ஷர்மா மே 7 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) டெஸ்ட் கேப்டன் பதவியை ஷுப்மன் கில் வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, அணியின் துணை கேப்டனாக இருந்த ஐஸ்ப்ரீத் பும்ரா, பணிச்சுமை கவலைகள் காரணமாக கேப்டன் பதவிக்கான பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், 25 வயதான ஷுப்மன் முன்னணியில் உள்ளார்.
முதுகுவலி காயத்திற்குப் பிறகு மூன்று மாத இடைவெளியில் இருந்து சமீபத்தில் திரும்பிய ஜஸ்ப்ரீத் பும்ரா, அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெறுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதனால் கில் நீண்டகாலமாக விளையாட வாய்ப்பு உள்ள ஷுப்மன் கில்லை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ரிஷப் பண்ட்
துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்
பிசிசிஐ வட்டாரங்களின்படி, ஜஸ்ப்ரீத் பும்ராவின் உடற்தகுதி பிரச்சினைகள் காரணமாக, அவர் முன்பு கேப்டனாக இருந்த போதிலும், கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து ரிஷப் பண்ட் ஷுப்மன் கில்லிற்கு உதவியாக துணை கேப்டனாக பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்தியாவின் ரெட் பால் கேப்டன்சியில் ஒரு தலைமுறை மாற்றத்தைக் குறிக்கிறது.
விராட் கோலி
விராட் கோலி ஓய்வு அறிவிக்க திட்டம்
இதற்கிடையே, விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ அவரை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், ஷுப்மன் கில் தலைமைப் பதவிக்கு மாறுவதற்கு அதிக நேரம் ஒதுக்குவதற்காக இங்கிலாந்து தொடருக்கு விராட் கோலியை மீண்டும் கேப்டனாக நியமிப்பது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இருப்பினும், கில்லின் தயார்நிலையில் தேர்வாளர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது.
கேஎல் ராகுலும் இந்தப் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டார், ஆனால் அவரது வயது மற்றும் சீரற்ற தன்மை குறித்த கவலைகள் அவரை நிராகரித்தன எனக் கூறப்படுகிறது.